தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வித்யாவிடம் நடந்ததை நினைத்து டென்ஷனாக பேசிக் கொண்டிருக்கிறார். இது மட்டும் இல்லாமல் சத்யா ஆன்ட்டி பணத்தை திருடிய வீடியோ முத்து போனில் இருக்கிறது. அதை நீ தான் எடுத்துக் கொடுக்கணும் என்று சொல்ல வித்யா அதிர்ச்சி அடைகிறார். நான் எப்படி எடுக்க முடியும் என்று சொல்ல நாளைக்கு கேப் புக் பண்ணு போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது என்று சொல்லி முத்துவின் போனை வாங்கி உடனே எனக்கு அனுப்பிட்டு டெலிட் பண்ணிடு என்று சொல்லுகிறார். இருந்தாலும் பயமா இருக்கு என்று சொல்ல எனக்காக இத பண்ணி தான் ஆகணும் என்று சொல்லுகிறார்.
முத்து சாமியாரை தேடி அதே கோவிலுக்கு செல்ல அங்கு இருப்பவர்கள் முத்துவிடம் வந்து பேசுகின்றனர். அவர்கள் தினமும் கோவிலுக்கு வருபவர்கள் என்பதால் சாமியாரை பற்றி விசாரிக்க ஆமாம்பா வந்தான் அவன் போலீஸ் சாமியார். அன்னதானம் போடறதா பொய் சொல்லி காசு வசூல் பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் கோயில் நிர்வாகத்திடம் சொல்லி அவனை விசாரித்த போது அவன் எதுவும் உண்மையை சொல்லவில்லை என்பதால் அவனை அடித்து துரத்தி விட்டார்கள் என்று சொல்ல, அவன மறுபடியும் பார்த்தால் எனக்கு ஒரு போன் பண்ணுங்க என்று சொல்ல, அவன அடிக்கும்போது நான் வீடியோ எடுத்து இருக்கேன் என்று வீடியோவை காட்ட முத்து பி ஏ தான் என்பதை உறுதிப்படுத்துகிறார். பிறகு அவர்களிடம் நானே இவன ரெண்டு மூணு வாட்டி அடிச்சுருக்கேன். இவன் ஒரு பொறுக்கி என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் வித்யா முத்துவுக்கு போன் பண்ணி கேப் புக் பண்ணுகிறார்.முத்து வந்தவுடன் காரில் ஏறுகிறார் வித்யா. முத்து வித்யாவிடம் பார்லர் அம்மா கூட எல்லாம் எப்படி பிரண்டா இருக்க அது ஒரு கேள்வி குறியாக இருக்கு என்றெல்லாம் கேட்கிறார். நீ எப்போ இருந்து ஃப்ரெண்ட் எந்த நேரம் பார்த்தாலும் பார்லர் அம்மா கூடவே சுத்திக்கிட்டு இருக்க என்று கேட்க ,நான் ஐடில ஒர்க் பண்றேன் என்று சொல்லுகிறார். அப்போ பார்லர் அம்மா எப்படி பிரண்டாச்சு என்று கேட்க அவர் திருத்திரு என்று முழித்து நம்ம வீடியோவை எடுக்கலான்னு பார்த்தா நம்ம வாயை புடுங்கி உண்மையை வாங்கிடுவான் போல இருக்கே என்று எதையோ சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு அவருக்கு ஒரு போன் வர உடனே சுவிட்ச் ஆஃப் ஆனது போல் பேசி முத்துவிடம் போனை வாங்குகிறார். வீடியோவை தேடி எடுத்த வித்யா அனுப்புவதற்குள் மீனா போன் பண்ணுகிறார். முத்து மீனாவிடம் இடியாப்பமும் சிக்கனமும் செஞ்சிருக்கேன் சீக்கிரம் சாப்பிட வந்துருங்க என்று கூப்பிடுகிறார். என்ன ஸ்பெஷல் என்று கேட்க கொலு வைப்பதால் நான் வெஜ் சமைக்க கூடாது அதனால் இன்னைக்கு சமைச்சேன் என்று சொல்லி முத்துவை கூப்பிடுகிறார். உனக்கு வேற ஏதாவது வேண்டுமா என்று பேசிக்கொள்கின்றனர். உடனே முத்து மீனா விடம் எனக்கு சவாரி வந்து இருக்கிறவங்க உனக்கு தெரிஞ்சவங்க தான் என்று சொல்லுகிறார் யாரு தேவி அக்காவா என்று கேட்க அவங்க எல்லாம் இல்ல என்று முத்து சொல்லுகிறார். பார்லர் அம்மாக்கும் ஃப்ரெண்ட் என்று சொன்னவுடன் வித்யாவா என்று கண்டுபிடித்து விடுகிறார். நான் நுங்கம்பாக்கம் வந்துட்டேன் அவங்கள விட்டுட்டு வீட்டுக்கு வந்துடுறேன் என்று சொல்லுகிறார். அதுமட்டுமில்லாமல் அந்த லெட்டர் எழுதினது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்ல வித்யா அதிர்ச்சி அடைகிறார். ஐயோ ரோகினி மாட்டிப்பாலே நம்ம எப்படியாவது இந்த வீடியோவை எடுக்கணும் என்று சொல்லி முடிப்பதற்குள் வித்யா இறங்கும் இடம் வந்து விடுகிறது. என்னாச்சு என்று முத்துவிடம் கேட்க நீங்க இறங்கப்போற இடம் வந்துடுச்சு இறங்குங்க என்று சொல்ல உடன் வித்யா மீண்டும் அதிர்ச்சி அடைகிறார்.
உடனே ரோகினிக்கு போன் போட அவர் என்ன வித்யா வீடியோ எடுத்துட்டியா என்று கேட்க இல்லடி மிஸ் ஆயிடுச்சு எல்லாமே பார்த்துட்டேன் ஆனா அனுப்புறதுக்குள்ள மீனா போன் பண்ணிட்டா என்று சொன்னவுடன் உன் கிட்ட போய் இந்த வேலையை சொன்னேன் பாரு என்று ரோகினி கோபப்படுகிறார். கோபப்பட்டு போனை வைக்க போக வித்யா ஒரு நிமிஷம் இரு என்று சொல்லி லெட்டர் கொடுத்தது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் என்று மீனாவிடம் சொன்னதை வித்தியாசமான உடன் ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.மறுபக்கம் எல்லோரும் இடியாப்பம், சிக்கன் குழம்பும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க அண்ணாமலை சூப்பரா இருக்குமா என்று சொல்ல விஜயா நான் இதை சொல்லவே இல்லையே எப்படி செஞ்ச என்று கேட்கிறார். அவருக்கு பிடிக்கும் என்று செஞ்ச என்று சொல்ல அவனுக்கு பிடிச்சது தான் நாங்க சாப்பிடனுமா என்று சொல்லுகிறார். அவ்ளோ நல்லா இல்ல உப்பு கம்மியா தான் இருக்கு என்று சொல்ல மனோஜ் அப்படி எல்லாம் இல்லமா நல்லாதான் இருக்கு என்று சொன்னவுடன் விஜயா முறைத்து பார்க்க ஆமாமா நல்லா இல்லை என்று சொல்கிறார்.
அந்த நேரம் பார்த்து முத்து வர, வீட்டில் அனைவரிடமும் உண்மையை சொல்ல வீட்டில் இருப்பவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ரோகினி எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.