தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் லெட்டர் போட்ட ஆளை கண்டுபிடித்து விட்டேன். அவனை ஏற்கனவே பெரியவங்க மேல வண்டிய மோதிட்டு நிக்காம போயிட்டான் அவன துரத்தி அடிச்சு போலீஸ்ல புடிச்சு கொடுத்தேன் என்று சொல்லுகிறார். அப்பயும் உன்னால தான் பிரச்சனை என்று விஜயா சொல்ல தப்பு பண்ணவரதான் அவர் அடிச்சிருக்காரு என்று மீனா சொல்லுகிறார். நீ பண்ண தப்புக்கு அவன் என்ன தூங்கவிடாமல் பண்ணி இருக்கான் என்று மனோஜ் சொல்ல நீ அவனை எங்கேயாச்சும் பார்த்து இருக்கியா என்று மனோஜிடம் முத்து கேட்கிறார். அதற்கு மனோஜ் எனக்கும் அப்படித்தான் தோணுச்சு அப்படித்தானே ரோகினி என்று கேட்க அப்படி எல்லாம் இல்ல நம்ம எங்க பார்த்தோம் என்று கேட்கிறார். அதற்கு முத்து இது என்னமோ என்ன பழிவாங்குறதுக்கான நோக்கமா தெரியல என்று சொல்ல ரோகிணி சமாளித்து விட்டு எழுந்து சென்று விடுகிறார் பிறகு முத்து லெட்டர் கொடுத்தவன கண்டுபிடிச்ச மாதிரி அவன் எதுக்காக எழுதினான் என்று கண்டுபிடிப்பேன் என்பதை சொல்ல உடன் ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு இருவரும் பேசிக் கொண்டு வண்டியில் வருகின்றனர். நீத்துவின் கார் ரிப்பேர் ஆகி நிற்பதால் கேப் புக் பண்ணியும் கேப் எதுவும் புக்காகவில்லை. பிறகு ரவி மற்றும் சுருதியின் பைக் வர கைபோட்டு நிறுத்துகிறார். அதற்கு சுருதி யார்ரா இவ பைக்க போட்டுக்கிட்டு இருக்கா என்று கேட்க அது வேற யாரும் இல்ல என்னோட ஓனர் நீத்துதா என்று சொல்ல அதற்கு ஸ்ருதி நிற்காமல் போ போ என்று சொல்லியும் ரவி நிறுத்துகிறார். கொஞ்சம் முன்னாடி வாங்க என்று சொல்லி ரெண்டு பேரையும் தள்ளிவிட்டு ஸ்ருதியன்பின்னால் உட்காருகிறார். பிறகு போலீஸ் இடம் மாட்டி ஸ்ருதி 500 ரூபாய் பணம் கட்ட நீத்து போலீசின் பைக்கில் உட்கார்ந்து சென்று விடுகிறார்.
மாடி மீது மனோஜ் இருக்கு அந்த நேரம் பார்த்து முத்து கையை வைக்க மனோஜ் பயப்படுகிறார். அதே சமயத்தில் ரவியும் மேலே வர எதுக்காக முத்து கூப்பிட்ட என்று கேட்க, கொலு வைக்க போவதுனால ஆளாளுக்கு என்னென்ன வேலை செய்யலாம் என்று பிளான் பண்ணனும் என்று சொல்லுகிறார். அதற்கு நாங்கதான் காசு கொடுத்துட்டோமே என்று மனோஜ் சொல்ல அது நீ கொடுக்கல பார்லரம்மா கொடுத்துச்சு என்று முத்து சொல்லுகிறார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் கொடுத்தோம் என்று சொன்னவுடன் ரவி நான் அண்ணி கூட சமைக்கிறதுக்கு ஹெல்ப் பண்றேன் என்னென்ன செய்யணும்னு லிஸ்ட் போட்டு கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். மனோஜிடம் என்ன வேலை செய்யப் போற என்று கேட்க அதுக்கு தான் மீனா இருக்காங்க என்று சொன்னவுடன் முத்து மனோஜை அடிக்க போக மனோஜ் அவசரபட்டு வார்த்தையை விட்டுட்டேனோ என்று யோசிக்கிறார். ரவி முத்துவிடம் நீ என்ன பண்ண போற என்று கேட்ட ஏற்கனவே படிக்கட்டு மற்றும் கொலு சாமான்கள் வாங்கியாச்சு கொலுளுக்கு வரவங்கள நான் கார்லயே கூட்டிட்டு போய் விடலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னவுடன் மனோஜிடம் நீ என்ன பண்ண போற என்று கேட்டால் நான் ரோகிணி என்ன சொல்றாலும் அதை தான் செய்வேன் என்று சொல்ல, சொந்தமா யோசிக்கவே மாட்டியா என்று கேட்கிறார் அதற்கு ரவி நீ மட்டும் அண்ணி பேச்சை கேட்டு தான் நான் நடக்கிறேன் என்று சொல்ல அப்படி எல்லாம் கிடையாது நான்தான் முடிவு எடுப்பேன் நான் சொல்றத செய்வா என்று சொன்னவுடன் வாங்க அண்ணி என்று ரவி சொல்ல வா மீனா என்று பயந்து பேசுகிறார் முத்து. உடனே ரவி கிண்டல் அடித்து பேசுகிறார். ரவி இந்த பிரச்சனை எல்லாம் விடுங்க நம்ம வீட்ல விசேஷம் நடக்க போகுது எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பண்ணனும் என்று சொன்னவுடன் இவனால தான் பிரச்சனை வரும் அது எப்படி நடக்கும் என்று அபச குணமாக பேச மனோஜை விரட்டுகிறார் முத்து.
மறுபக்கம் மீனா லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஸ்ருதி வர என்ன எழுதிட்டு இருக்கீங்க என்று கேட்க கொளு வைக்கிறதுக்கு என்னென்ன சமைக்கணும் என்று லிஸ்ட் போட்டு கிட்டு இருக்கேன் ஸ்ருதி என்று சொல்லுகிறார். உடனே ரோகினையும் வர ரோகினிடம் பாத்தீங்களா ரோகிணி என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு கேட்டது என்று சொல்லுகிறார். நீங்களும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க எனக்கு சமைக்க தெரிஞ்சா நான் ஹெல்ப் பண்ணுவேன் என்று சொல்ல வேண்டாம் சொல்லி இருக்காரு என்று சொன்னவுடன் ஆமா நேத்தே சொன்னன் என்று சொல்லுகிறார். உடனே மீனா லிஸ்ட்டை சொன்னவுடன் சொல்லும் போதே டெம்ப்ட் ஆகுது நான் வேற டப்பிங் முடிச்சிட்டு லேட்டா வருவ எனக்கு கிடைக்குமா என்று கேட்க அதெல்லாம் எடுத்து வைக்கிறேன் என்று மீனா சொல்லுகிறார். உடனே ஸ்ருதி அப்படியெல்லாம் இல்ல நானே அஞ்சு மணிக்கு சீக்கிரமா வந்துடுவேன் என்று ஸ்ருதி சொல்லுகிறார்.
மீனா ஸ்ருதியிடம் என்ன சொன்னார்? ரோகினியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.