தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் ப்ரோமோஷன் விஷயத்தை சீதாவிடம் சொல்லிவிட்டு எங்க இருக்க என்று கேட்க கோவிலில் இருப்பதாக சொல்லுகிறார் கொஞ்ச நேரத்துல நானே வரேன் என்று சொல்ல அம்மாவும் அக்காவும் இருக்காங்க என்று சீதா சொல்லுகிறார் அவங்ககிட்ட பேசணும் அதுக்காக தான் வரேன் என்று சொல்லி போனை வைக்க சீதா கோவிலில் இருந்து வெளியில் வந்து சந்திராவிடம் அருண் வரும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே சந்திரா கோபப்பட்டு எதுக்கு இப்ப போன் பண்றாரு அதுதான் நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லியாச்சு இல்ல என்று கேட்க அவருக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கா அதுக்காக சொல்லியிருந்தார் என்று சொல்ல, மாப்பிள்ளையோட சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது என்று சொல்லிவிட்டு நான் பூ கொடுக்க கிளம்புறேன் என்று கிளம்பி விடுகிறார்.
சந்திரா கிளம்பியவுடன் அருண் கோவிலுக்கு வர மீனாவை சந்தித்து பேசுகிறார். எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு உங்க வீட்டுக்காரர் உதவி பண்ணாரு என்று சொல்ல, பிறகு எங்க வீட்டில எங்க அம்மா பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க அவங்களும் எவ்வளவு பேசி பாத்துட்டாங்க உங்களுக்கு நம்பிக்கையே போயிடுச்சு அதனாலதான் இந்த முடிவுக்கு வந்துட்டாங்க நீங்க தான் ஏதாவது பேசணும் உங்க புருஷன் எனக்கு பழி வாங்க பார்க்கிறார் என்று சொன்னேன் அவர் அந்த மாதிரி ஆள் கிடையாது என்று சொல்ல அருண் விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்ப சீதா மீனாவிடம் எனக்கு இப்போ அப்பா இல்லாத கஷ்டம் தெரியுது. அவர் என்னோட ஆசையை நிறைவேற்றி இருப்பார் ஆனால் அவர் இல்லாததுனால என் வாழ்க்கையில் என்ன நடக்கனும்னு எல்லாரும் முடிவு பண்ற மாதிரி ஆயிடுச்சு. என்று கண்கலங்கி பேசிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் அருண் திருடனை அவர் மட்டும் பிடித்தது போல் பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை செல்வமும் அவரது நண்பர்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கொஞ்ச நேரத்தில் முத்து வந்தவுடன் அந்த வீடியோவை காட்ட யாரும் நல்ல கால பண்ணி இருக்கோம் இவ்ளோ பெரிய விஷயம் பண்ணி இருக்கான் பரவால்ல உன்ன மாதிரி தைரியம் சரியா இருக்கான் என்று எல்லாம் பாராட்டி பேசமுத்து வீடியோவை பார்த்துவிட்டு இதை பண்ணதே நான்தான் நான் அவன் பேரு வாங்கிட்டு போறானா என்று கோபப்பட்டு அருணுக்கு போன் பண்ணி பேச அருண் இது தான் போலீஸோட பவர் என்று சொல்லி போனை கட் பண்ண முத்து டென்ஷன் ஆகி எனக்கு அப்படியே மண்டைல ஓடிட்டே இருக்கு நான் குடிச்சிட்டு அவங்க வீட்ல போய் என ஆரம்பிக்க அதெல்லாம் வேணாம் நீ குடி எல்லாம் வீட்டுக்கு போய் படு அங்கெல்லாம் போகாத என்று செல்வம் அனுப்பி விடுகிறார்.
மறுபக்கம் மனோஜ் ரோகினி சொன்ன ஹோட்டலுக்கு வந்து உட்கார கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து தோழியின் கணவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.மனோஜ் இவர் தான் மகேஷா என்று தெரிந்து கொள்கிறார் உடனே கொஞ்ச நேரத்தில் வந்து யார் இது, இவன் தான் அந்த மகேசா என்று கேட்க உனக்கு எப்படி தெரியும் ஒட்டு கேட்டியா என்று கேட்கிறார் அதெல்லாம் இல்லை என்று சொன்னால் இவர் என்னோட பிரண்டோட ஹஸ்பண்ட் என் ஃப்ரெண்ட் பேர்தான் மகேஷ் என்று சொல்ல மாத்தி பேசாதே என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் அவரது தோழி மகேஸ்வரி வந்துவிட விஷயம் தெரிந்த பிறகு மனோஜை ரோகினி வெளியில் அழைத்து வந்து பேசுகிறார். ரோகிணி என்ன கேட்கிறார்?அதற்கு மனோஜ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
