தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜை சமாதானப்படுத்தி சந்தோஷமாக வாழ ஒரு சாமியாரை போய் சந்திக்கலாம் என்று சொல்ல மனோஜ் நீ என்னவெல்லாம் பண்ணுன சம்மதிக்கிறேன் என்று சொல்ல, சந்தோஷமாக இருவரும் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட சொல்கின்றனர். மறுபக்கம் ஸ்ருதி ரூமில் டென்ஷன் ஆக யோசித்துக் கொண்டிருக்க எதுக்கு இப்போ ரூமுக்குள்ள வாக்கிங் போற என்று கேட்க வாக்கிங் போறேன்னா நான் ரெஸ்டாரண்டுக்கு பேர் யோசிச்சுக்கிட்டு இருக்க நீ ஏதாவது ஒரு ஹெல்ப் பண்றியா எதுவுமே பண்ண மாட்டேங்குற என்று சொல்ல அது உன்னோட ரெஸ்டாரன்ட் ரெஸ்டாரன்ட் கொஞ்சம் தள்ளி போட யோசிச்சா நீ பேரை யோசிக்கிறியா என்று கேட்கிறார்.
நீ ரெஸ்டாரண்டுக்கு பேர் வைக்கிறதும் ஒன்னும் பொறக்காத குழந்தைக்கு பெயர் தேடுறதும் ஒன்னு என்று சொல்ல ஸ்ருதி நான் தான் குழந்தை எடுத்துக்கலாம்னு சொல்லிட்டேனே என்று சொல்ல, ரவி ஹேப்பி என்ற வார்த்தையை சொன்னவுடன் ஸ்ருதி இப்ப என்ன சொன்ன என்று கேட்க ஹாப்பி என்று சொல்லுகிறார் பிறகு ரெஸ்டாரண்டுக்கு ஹாப்பி என பெயர் வைக்க உள்ளதாகவும் சுத்தி முடிவெடுக்கிறார். முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மீனாவை கூப்பிட இன்னைக்கு எதுக்கு குடிச்சிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அந்த போலீஸ்காரன் எனக்கு துரோகம் பண்ணிட்டான் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்க முத்து நடந்த விஷயங்களை சொல்லுகிறார் அது எப்படி கஷ்டப்பட்டு அவர் புடிச்சிட்டு உங்கள சொல்லுவாருன்னு நினைக்கிறீங்க என்று கேட்க கஷ்டப்பட்டு அவன் புடிச்சானா நான் புடிச்சேன் என்று நடந்த விஷயங்களை மீனாவிடம் சொல்லுகிறார்.
மீனா எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சிருக்கீங்க அப்புறம் ஏன் அவர் எதுவும் சொல்லல சரி நீங்க போய் படுங்க காலையில பேசிக்கலாம் என்று உட்கார கொஞ்ச நேரத்தில் சீதா போன் பண்ணி என்ன ஆட்சிக்கா என்று கேட்கிறார் இல்ல சீதா அருண் சொன்னதுக்கு உங்க மாமா சொன்னதுக்கும் வித்தியாசம் இருக்கு இவர்தான் ஹெல்ப் பண்ணதா சொல்றாரு சரி எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் என்று போனை வைக்கின்றனர் மறுநாள் காலையில் வீட்டிற்கு முத்து காப்பாற்றிய பெண்மணியும் அவரது கணவரும் வருகின்றனர் விஜயா அவர்களை வரவேற்று உட்கார வைக்க உங்க பையனுக்கு நாங்க மரியாதை செய்யணும் அதற்காக வந்திருக்கிறோம் என்று சொன்னவுடன் விஜயா மனோஜை கூப்பிடுகிறார். உடனே அந்தப் பெண்மணி இவர் இல்லை என்று சொல்ல ரவியை கூப்பிடுகிறார் அவரும் இல்லை என்று சொல்ல முத்து என்று சொன்னவுடன் மீனா என்னோட வீட்டுக்காரர் தான் என்று சொல்ல அண்ணாமலை அப்ப கூட உனக்கு முத்துப் பேர சொல்லணும்னு வராதா என்று கேட்கிறார். இருங்க கூப்பிடற மேல இருக்காரு என்று சொன்னவுடன் முத்துவை கூப்பிட அவர்கள் என்னமோ இங்க வந்து இருக்கீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்கிறார்.
உடனே அந்த பெண்மணி ரொம்ப நல்ல புள்ளைய பெத்து இருக்கீங்க என்று முத்துவை பற்றி பாராட்டி பேசுகிறார். என்ன விஷயம் என்று கேட்க எங்க உயிர் காப்பாற்றி இருக்காரு ஒரு திருடன் வந்து என்னை கொல்லப் பார்த்தான் அவன் கிட்ட இருந்து காப்பாத்துனது உங்க பையன் தான் என்று எமோஷனலாக பேசுகின்றனர். பிறகு கொஞ்ச நேரத்தில் அவர்கள் இருவரும் அண்ணாமலை விஜயாவிடம் ஆசிர்வாதமாக அது மட்டுமில்லாமல் விஜயாவின் வயிற்றை தொட போக எதற்கு என்று கேட்க அதற்கு அந்த பெண்மணி ரொம்ப தங்கமான புள்ளைய பெத்து இருக்கீங்க இந்த வைத்த ஒரு வாட்டி தொட்டு புண்ணியம் சேர்த்துக்கலாம் என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது.
உடனே சுருதி அதனை எல்லாம் வீடியோ எடுக்க கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்மணி இடம் நீங்கள் நடந்தது எல்லாத்தையும் சொல்லுங்க என்று சொல்ல இதில் சொல்றதுக்கு எனக்கு சந்தோசம் தான் என்று அந்த பெண்ணும் நடந்த விஷயங்களை வீடியோவில் சொல்லுகிறார். பிறகு என்ன நடக்கிறது? குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? அருணுக்கு வந்த பிரச்சனை என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
