தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும், சந்திராவும் சத்யா பற்றிய யோசித்துக் கொண்டிருக்க சந்திரா மாப்பிள்ளைக்கு ஒரு போன் போட்டு பாருமா என்று சொல்ல பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் அவர் எடுக்க மாட்டேங்கறாரு அவரே பண்ணுவாரு என்று சொல்ல முத்து சத்யாவை காப்பாற்றி விட்ட பிறகு போனை பார்க்க மீனா பண்ணி இருப்பதாக சொல்லி பண்ணுகிறார் உடனே சீதாவிற்கு அருண் போன் பண்ணுகிறார். உடனே போனை வெளியே எடுத்துச் சென்று போய் சீதா பேச முத்து சத்யாவை காப்பாற்ற விஷயத்தை சொல்ல அருண் அதே விஷயத்தை சீதாவிடம் சொல்லுகிறார். போலீஸ் போறத்துக்கொள்ள உங்க மாமாவே காப்பாத்திட்டு இருக்காரு ரொம்ப நல்லவரா தான் இருப்பார் போல என்று சொல்லுகிறார். எங்க மாமா ரொம்ப நல்லவர்தான். என்ன உன் கோபம் தான் வரும் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.
முத்துவும் அந்த போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறவரும் நல்லவரா இருக்காரு ஒருநாள் சந்திச்சி நன்றி சொல்லணும் என்று முத்துவும் சொல்லுகிறார்.எக்ஸாம்க்கு டைம் ஆயிடுச்சு மீனா நான் கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று சொல்லி போனை வைக்க சீதா உள்ளே வந்து நிற்கிறார் உடனே மீனா சத்யா கிடைச்சுட்டா என்று சொல்ல அது தெரியுமே என்று சொல்லுகிறார் எப்படி தெரியுமா என்று கேட்க இப்பதான் நீ சொன்னியே என்று சொல்லுகிறார். அவங்கள வந்து போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்களா என்று சொல்ல அதுவும் தெரியுமே என்று சொல்லுகிறார் அது எப்படி தெரியும் என்று கேட்காத நீ இப்ப சொன்னியே என்று அதையே சொல்லி சமாளித்து விடுகிறார். உடனே சந்திரா மாப்ள நம்ம வீட்டுக்கு ஒரு தூனா இருக்கிற மாதிரி சீதாவுக்கும் ஒருத்தர் கிடைக்கணும் என்று சொல்ல அப்படி சீதாவை பார்த்து கூட்டிட்டு வந்துருவா என்று சொல்லுகிறார் என்னடி சொல்ற என்று கேட்க ஒன்னும் இல்ல சும்மா சொன்னேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க ரோகினி வீட்டுக்கு வந்து ஆன்ட்டி என்று பக்கத்தில் நின்று கூப்பிட்டும் விஜயா கேட்காதது போல் இருக்க அண்ணாமலை கூப்பிட்டவுடன் என்ன என்று கேட்கிறார். அமைதியா இருக்க என்று சொல்ல என்ன என்று ரோகினி இடம் கேட்கிறார் இதெல்லாம் 20000 பணம் இருக்கு என்று சொல்ல என்ன பணம் என்று கேட்கிறார் இன்னைக்கு ஒரு பிரைடல் மேக்கப் போயிருந்தேன் என்று சொல்லிக் கொடுக்க நீ எதுக்கு என்கிட்ட கொடுக்கணும் என்று கேட்டு வேண்டாம் என்று சொல்லுகிறார் அதற்கு ரோகிணி நான் விருப்பப்பட்டு தான் உங்ககிட்ட கொடுக்கிறேன் நீங்க தானே சொல்லி இருக்கீங்க என்று சொல்ல மனோஜ் அவ விருப்பப்பட்டு தான் கொடுக்கிற வாங்கிக்கோங்கம்மா என்று சொல்ல உடன் விஜயா பணத்தை வாங்கிக் கொள்கிறார்.
நான் பணத்தாசை புடிச்சவ எல்லாம் கிடையாது என்று சொல்ல சுருதி அப்போ வேற என்ன என்று கேட்க ரவி ஸ்ருதியை அமைதியாக இருக்க சொல்லுகிறார். அண்ணாமலை உனக்கு பணத்து மேல ஆசை இல்லனா அவ கேட்ட உடனே அவகிட்ட அந்த பணத்தை வாங்கி இருக்கக் கூடாது என்று சொல்ல அதற்கு விஜயா அவர் தப்பு பண்ணி இருப்பா அதுக்காக தான் இப்படி பண்ற. கோர்ட்ல தப்பு பண்றவங்களுக்கு அபராதம் இருக்கிற மாதிரி இவ பண்ண தப்புதான் நான் காசு வாங்குறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார். சந்தோஷமான விஷயம் என்று சொல்ல விஜயா ஒருவேளை கர்ப்பம் ஆயிட்டாளா என்று யோசிக்க என் தம்பி எக்ஸாம் நல்லபடியாக எழுதி முடித்து விட்டார் என்று சொல்லி அனைவருக்கும் சாக்லேட் கொடுக்கிறார் பிறகு அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டு வாழ்த்து சொல்ல விஜயா இப்ப என்ன கலெக்டர் பரீட்சை எழுதி இருக்கான் என்று கிண்டல் அடிக்கிறார்.
மீனா எங்கள மாதிரி குடும்பத்துல இருந்து வர்றவங்க ஒரு டிகிரி படிக்கிறது ரொம்ப பெரிய விஷயம் நாங்க எந்த காசு பணத்திற்கும் ஆசைப்படுறவங்க இல்லை என்று சொல்ல முத்து அவர்கள் கையில 20 ஆயிரம் பணம் இருக்கு நீ ரெண்டு ரூபா சாக்லேட் கொடுத்தால் எப்படி வாங்கிப்பாங்க என்று கேட்ட விஜயா கோபமாக சென்று விடுகிறார்.
பிறகு முத்துக்கு மீனா பால் கொன்டு வந்து கொடுக்க அப்போது மீனாவிடம் அந்த நேரத்துல கேட்க முடியல சீதாவுக்கு சத்யா இருந்த லொகேஷன் எப்படி கிடைச்சது நாங்களும் அதுக்கு முன்னாடி சைபர் கிரைம் போய் விசாரிச்சா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல நான் அதை பத்தி கேட்கலை என்று மீனா சொல்லுகிறார் கேளு மீனா அங்களுக்கு நன்றி சொல்லலாம் என்று சொல்லுகிறார். என்னமோ இருபதாயிரம் சொல்லிக்கிட்டு இருந்தீங்க என்ன விஷயம் என்று கேட்டேன், நடந்த விஷயங்களை மீனாவிடம் சொல்லுகிறார். பணக்காரன் மருமக என்று அம்மா கணக்கு போட்டாச்சு ஆனா ஒண்ணுமே இல்லன்னு தெரிஞ்சவங்க தலையில் இருந்து கீழே இறக்கிட்டாங்க இப்ப அது சமாளிக்கிறதுக்காக எங்க அம்மாவோட மனசை மாத்த பணத்தை கொடுத்து சமாளிக்க பாக்குது பார்லர் அம்மா என்று சொல்லிவிட்டு அதுக்கு எல்லாம் எங்க அம்மா வசியம் மாட்டாங்க என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மறுபக்கம் சீதாவும் சந்திராவும் அருண் வீட்டிற்கு வருகின்றனர். அங்கு என்ன நடக்கிறது? அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
