Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனாவே கஷ்டப்படுத்திய விஜயா, மன வருத்தத்தில் ரோகினியின் அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

SiragadikkaAasai Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபமாக வீட்டை விட்டு வெளியே வந்த ரோகினியின் அம்மா வெளியே வந்து அழுகிறார். க்ரிஷ் ஏன் பாட்டி முத்து மாமாவையும் மீனா ஆன்ட்டி திட்டினீங்க அவங்க ரொம்ப பாவம் என்று சொல்ல ரோகினி அம்மா கண்கலங்குகிறார். பிறகு மீனா நடந்ததை நினைத்து அமைதியாக நிற்க விஜயா உங்க மருமக கொலு சிறப்பாக நடத்திட்டா ரொம்ப சந்தோஷம் இதெல்லாம் நமக்கு தேவையா என்று கேட்டுவிட்டு உள்ளே சென்று விடுகிறார். அண்ணாமலை நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத அம்மா என்று சொல்லிவிட்டு அவரும் கிளம்ப முத்து மீனாவை அழைத்துச் செல்கிறார்.

மறுபக்கம் ரோகினி அம்மா நடந்ததை நினைத்து கண்கலங்கி கொண்டு இருக்க வித்யா சாப்பிடுறிங்களா என்று கேட்கிறார். வேண்டாமா ஏற்கனவே ரெண்டு மனச காயப்படுத்திட்டு வந்து இருக்கேன் என்று பேசிக் கொண்டிருக்க ரோகினி வருகிறார். சாப்டியாமா இன்னைக்கு தான் நான் சந்தோஷமா இருக்கேன் நல்லா தூங்க போறேன் என்று சொல்ல ரோகிணி நம்ம கோபத்துடன் இதுக்கு அப்புறம் நான் எப்படி தூங்க முடியும் எனக்கும் கிருஷ்க்கும் நல்லது மட்டுமே நினைச்ச அவங்கள இப்படி அசிங்கப்படுத்தி காயப்படுத்திட்டு வந்து இருக்கேன் என்று சொல்லி அழுகிறார். உடனே ரோகினி உன்னோட பொண்ணு லைஃப்க்காக பேசுவது தான் நினைச்சுக்கோ என்று சொல்ல, ரோகினி அம்மா என்னோட உயிரையும் க்ருஷ் உயிரையும் காப்பாத்துங்க தவிர அவங்க வேற என்ன பண்ணாங்க. சபைல எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்கிறது பார்க்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருந்தது. என்று கோபமாக பேச ரோகினி என் லைஃப் இப்படி ஆனதுக்கும் நீதான காரணம் என்று சொல்லுகிறார். ஆமா நான் தான் காரணம் எல்லாம் என் மேலேயே சொல்லு எல்லாம் ஏத்துக்கிறேன் என்று சொல்ல வித்யா ரோகினியை அமைதியாக இருக்க சொல்லுகிறார். ரோகிணி அம்மாவிடம் இங்கே வீடு பாத்துட்டேன் கிருஷ் ஸ்கூல்ல சேர்த்து விடலாம். நான் உங்க கூட தான் இருப்பேன் என் பையனை நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். அதற்கு ரோகிணி அம்மா நல்ல மனசு கஷ்டப்படுத்தினால் கண்டிப்பாக பலனை அனுபவிச்சு தான் ஆகணும் நீ ஒரு பொய்யா அடிக்கல வெச்சு வாழ்ந்து கிட்டு இருக்க ஆனா அது உன்ன ரொம்ப நாளைக்கு காப்பாத்தாது என்று சொல்லிவிடுகிறார்.

மீனா மாடியில் உட்கார்ந்து தனியாக அழுது கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார் உன்னை வீட்ல எல்லாம் தேடிக்கிட்டு இருக்கேன் இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன் என்று கேட்க நம்ப மனசு கஷ்டப்படுத்தவே மாட்டாங்கன்னு நினைச்ச ஒருத்தன் நம்மள அசிங்கப்படுத்தும் போது அதோட வலி மனசு உடைஞ்சு போயிடுதுங்க என்று சொல்லி அழுகிறார். எனக்கும் இப்படி பேசினாங்கன்னு தெரியல மீனா, என்று பேசிக் கொண்டிருக்க ரோகினி இதனை ஒட்டு கேட்கிறார். இது ஏன் அவங்க பொண்ணு சொல்லி இவங்க செஞ்சிருக்க கூடாது என்று முத்து சந்தேகப்படுகிறார். இதுக்கு மேல நம்ம கிருஷ் பாக்க முடியாதவங்க என்று மீனா கேட்க என்ன கண்டிப்பா பாக்கலாம் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லி முத்து மீனாவிற்கு ஆறுதல் சொல்லுகிறார். இதைக் கேட்ட ரோகினி அடங்கவே மாட்டாங்களா என்று கோபப்பட்டு நிற்க அந்த நேரம் பார்த்து விஜயா வந்தவுடன் போன் சிக்னல் இல்லாதது போல் மேலே வருகிறார் விஜயா ரோகினி இடம் கொலு வச்சதலையே இன்னைக்கு தான் எனக்கு சந்தோசமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் முத்து உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அவளே அழுதுகிட்டு இருக்கா அவ கிட்ட எப்படி பேசுறீங்க என்று கேட்க, என்னமோ மகாராணி மாதிரி வந்து நடு வீட்டுல கத்திட்டு போறான் ஊர் பெயர் தெரியாதவங்கல்லாம் வீட்டுல சேர்த்தா இப்படித்தான் என்று சொல்ல ஆன்ட்டி என ரோகிணி கோபப்படுகிறார். உடனே அவங்க மேல நம்ம ஏன் குறை சொல்லணும் இவங்க ஏன் குழந்தைய அடாப் பண்ண நினைக்கிறாங்க என்று சொல்லுகிறார். அத்தை உங்க வீட்ல நடந்த அவமானத்துக்கு நான் தான் காரணம் என்ன மன்னிச்சிடுங்க என்று கையெடுத்து கும்பிடுகிறார்.

அம்மா வீட்டுக்கு வரும் மீனா அம்மா அம்மா என்று கூப்பிட சீதா வருகிறார் அம்மா காலைலயே கோவிலுக்கு போயிட்டாங்க இன்னைக்கு சாமி கல்யாண ஒன்னு இருக்கு அதற்காக மாலை கொடுக்க போய்ட்டாங்க என்று சொல்ல சத்தியா எங்க என்று கேட்கிறார் அதற்கு காலேஜ் போய்ட்டான் என்று சொல்லிவிட்டு தண்ணி கொடுத்து விட்டு டீ போட உள்ளே வருகிறார் சீதா. என்னாச்சு அக்கா என்ன பிரச்சனை மாமா ஏதாவது சொல்லிட்டாரா இல்ல உன்னோட மாமியார் ஏதாவது சொன்னாங்களா என்று சொன்னார் அதெல்லாம் ஒன்னும் இல்ல கிர்ஷ் ஓட பார்த்து பேசினதை எல்லாம் சீதாவிடம் சொல்கிறார். அவங்க அப்படி எல்லாம் அம்மா பேசுவாங்க என்று சீதா சொன்னேன் இதுல ஏதோ ஒன்னு இருக்கு சீதா என்று யோசிக்கிறார் மீனா.

உடனே முத்துவிடம் நான் வேணா உங்களுக்கு ஒரு போன் பண்ணி கேட்கட்டுமா என்று கேட்க அதற்கு ஏன் போன்ல திட்டு வாங்கறதுக்கா அதெல்லாம் தேவையில்லை கொஞ்ச நாள் போகட்டும் என்று முத்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சத்யா உள்ளே வருகிறார். சீதா இப்ப தானடா காலேஜ் போன அதுக்குள்ள எப்படி வந்த கட்டடிச்சிட்டியா என்று கேட்க இல்ல எக்ஸாம் எழுத முடியாதுன்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க என்று சொல்லுகிறார். என்னாச்சு திருப்பி ஏதாவது தப்பு பண்ணியா என்று சீதா கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல சீதா அட்டெண்டென்ஸ் இல்ல அதனால அப்படி சொல்லிட்டாங்க என்று சொன்னவுடன் சீதா சத்யாவை அடிக்கிறார். உடனே மீனா தடுத்து அவ இப்ப எதுவும் தப்பு பண்ணல முன்னாடி செஞ்ச தப்போட வினைய தான் இப்போ அனுபவிச்சுக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார்.

உடனே சத்யா அவ்ளோதான்கா என் படிப்பு போய்விட்டது என்று அழுகிறார். உடனே சத்யாவிடம் முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு சத்யாவின் பதில் என்ன? என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update
SiragadikkaAasai Serial Episode Update