தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பக்கெட் உடன் வர அண்ணாமலை ரூமில் இருந்து எழுந்து வருகிறார் மாமா நான் வாசல் தெளிக்கணும் போகவா என்று கேட்க இதை நீ செய்யற வேலைதானம்மா என்கிட்ட ஏன் கேக்குற என்று சொல்ல இன்னும் அவங்க வெளியே தான் படுத்துக்கிட்டு இருக்காங்க மாமா என்று மீனா சொல்லுகிறார் ஆமா இல்ல என்று அண்ணாமலை கதவைத் திறக்க மூன்று பேரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர். உடனே அண்ணாமலை அவர்களை எழுப்ப ரவி மனோஜை எழுப்பி கூட்டி வருகிறார். உடனே விஜயா ஓடி வந்து எப்படி மனோஜ் தூங்குன கஷ்டமா இல்லையா என்று வருத்தப்படும்படி கேட்க உன்னால தான் இப்படி எல்லாம் நடக்குது என்று திட்டுகிறார்.
பிறகு மனோஜிடம் இருக்கிற வேலையை விட நம்மளுக்கு வேலை அதிகமாகும் போது தான் இன்னும் பொறுப்பு அதிகமாக இருக்கணும், பிசினஸ் மீட்டிங்கன்னு சொல்லி குடிக்க ஆரம்பிச்சுட்ட, நீ குடிச்சது இல்லாம ரவியையும் குடிக்க வச்சிருக்க என்று அண்ணாமலை வார்னிங் கொடுக்கிறார்.
விஜயா இவங்க ரெண்டு பேரும் கெடுத்தது நீ தான் என்று முத்துவைத் திட்ட உடனே மீனா அவரு உன்னை யார் குடும்பத்தை கெடுக்கல என்று சண்டைக்கு வர அவன் எப்படி போனா எனக்கென்ன என்று விஜயா சொல்லுகிறார். உடனே ஸ்ருதி வந்து ரவி மீது கோபப்பட்டு பேச நீ பண்ணலன்னா கூட பரவாயில்லை எடுத்துக் கொடுக்காத என்று ரவி சொல்லுகிறார். பிறகு ரவியை சுத்தி இழுத்து செல்ல மனோஜ் சென்றுவிடுகிறார் பிறகு முத்து மீனாவைப் பார்த்து எதுவும் பேசாமல் நிற்க மீனா இதுக்கு தான் நான் பல தடவை சொல்ற எல்லா பழியும் நீங்க வாங்கி கேட்டீங்களா என்று கோபப்பட்டு பேசி விடுகிறார்.
ரூமில் மனோஜிடம் நீயும் அந்த முத்து மாதிரி பண்ணிட்ட இல்ல இதுக்கு மேல பிசினஸ் மீட்டிங்ல பிடிக்காத போய் பிரஷ்ஷப் ஆகு என்று திட்டிவிட அவர் ரெஸ்ட் ரூம் போக கோட்டோட எதுக்கு போற என்று கேட்டு கோட்டை கழட்டி அதிலிருந்து போனை எடுத்து சந்தோஷப்படுகிறார்.
காலையில் முத்துவிற்கு மீனா காபி கொண்டு வந்து கொடுக்க கொஞ்சம் ஸ்ட்ராங்கா போட்டு இருக்கலாம் இல்ல மீனா என்று கேட்க நேத்து நைட்டு தான் ஸ்ட்ராங்கா போட்டீங்களே அப்புறம் என்ன என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல இவ்வளவு நாளா கொடுத்திருக்கேன் தலையில சுத்தல ஆனா இப்ப சரியான தூக்கம் இல்ல அதனால தல சுத்துது என்று சொல்ல அப்ப மாமா கரெக்டான பனிஷ்மென்ட் தான் கொடுத்திருக்கிறார். இனிமேல் நானும் அப்படித்தான் பண்ணுவேன் என்று சொல்லுகிறார். உடனே ரவி வெளியே வந்து தலை எல்லாம் வலிக்குது என்று சொல்ல ஃபர்ஸ்ட் அப்படி தான் இருக்கும் போக போக சரியா போயிடும் என்று முத்து சொன்ன உடன் சுருதி என்னது போகப் போகவா இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும் அப்படி குடிச்சா ரோட்ல தான் படுக்கணும் என்று சொல்லி ரவியை மிரட்டுகிறார். கொஞ்ச நேரம் கழித்து சிலர் மாலையுடன் வந்து மனோஜ் சார் எங்க இருக்காரு என்று கேட்கின்றனர். ரோகினி அவர்களை உள்ளே கூப்பிட அந்த நேரம் பார்த்து அண்ணாமலை விஜயா என அனைவரும் வருகின்றனர். என்ன விஷயம் என்று கேட்டோம் சார் வரட்டும் என்று சொல்ல மனோஜ் வந்தவுடன் அவருக்கு வாழ்த்து சொல்லி அனைவரும் மாலை போடுகின்றனர். இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பெரிய டீலரை புடிச்சிருக்காரு ரொம்ப பெரிய விஷயம். இன்று பெருமையாக பேச மனோ சந்தோஷப்படுகிறார். இது உங்க நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றெல்லாம் பேச, மீனா உடனே முத்துவிடம் நீங்க உண்மைய சொன்னதுக்காக அவர் கொடுத்த கிஃப்ட் இது ஆனா இவங்க பொய் சொல்லி ஏமாத்துனாங்க ஆனால் அந்த இடத்தில் அவர் எதுவுமே சொல்ல மாட்டேங்குறாரு என்று சொல்ல அவன் நல்லா இருந்தா போதும் விடு என்று சொல்லி விடுகிறார். அவர்கள் நீங்க பெரிய தொழிலதிபரா வரணும் என்று சொல்ல உடனே விஜயா அவன் ஜாதகத்திலேயே அப்படி தான் சொல்லி இருக்காங்க என்று சொல்லி பெருமைப்படுகிறார்.
பிறகு வந்தவர்கள் எங்களுக்கு தான் எல்லா டீலர் ஷிப்பும் கொடுக்கணும் என்றெல்லாம் சொல்ல நீங்க எல்லாரும் மெயில் அனுப்புங்க கண்டிப்பா உங்களுக்கு கன்சிடர் பண்ற என்று மனோஜ் பில்டப் கொடுக்கிறார். உடனே அவர்கள் அனைவரும் கிளம்ப, மாலையுடன் சோபாவில் உட்கார்ந்து கொண்ட மனோஜ் இனிமே யாருனா வந்தா என்ன அவன் இவன்னு கூப்பிடாதீங்க என்று விஜயாவிடம் சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. பிறகு உடனே முத்து அப்போ உன் அம்மா சார் இருந்தாலும் கூப்பிடனும் என்று சொல்ல உடனே விஜயா அவன் சொல்றதும் சரிதானே என்று உடனே மாற்றிப் பேசுகிறார்.
மறுநாள் காலையில் முத்து போனை தேட காணாமல் இருக்க பதறிப் போகிறார்? என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
