மனோஜ் கேட்ட கேள்விக்கு விஜயா அதிர்ச்சியான பதிலை கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்,ரவி, முத்து மூவரும் மொட்டை மாடியில் குடித்துக்கொண்டு அவரவர் பிரச்சினைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். மனோஜ் அவரது நண்பர் சொன்ன விஷயத்தை சொல்ல முத்து அப்படித்தான் நடக்கும் என சொல்ல மீண்டும் பயப்படுகிறார் உடனே சுருதி தனியா ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணனும்னு சொல்றா அது எப்படி கெத்தா இருக்கும் என்னோட பணத்துல ஓப்பன் பண்ண வேணாம் நல்லா இருக்கும் புரிஞ்சுக்க மாட்ற என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் முத்து சீதா லவ் பண்றா ஆனா மீனா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்றா என்று சொல்ல சீதா ஒரு முடிவதா கரெக்ட்டா தானே இருக்கும் என்று ரவி சொல்ல அதற்கு முத்து இல்ல அந்த அருணை பத்தி உங்களுக்கு தெரியாது அவன் கூட சேர்ந்து வாழ்ந்தால் சீதா சந்தோஷமாக இருக்க மாட்டா என்று மூவரும் பேசி புலம்ப மறுபக்கம் கிச்சனில் மீனா,ஸ்ருதி, ரோகினி மூவரும் டீ குடித்துக்கொண்ட பேசிக் கொண்டிருக்கின்றனர். மீனா சீதா விஷயத்தை சொல்ல ஒருவேளை முத்துவுக்கு பிரதர் இன் லா பெரிய ஆளா இருக்கறதுனால அவரால் ஏத்துக்க முடியலையா என்று கேட்க அவர் அப்படியெல்லாம் யோசிக்கிற ஆள் இல்லை என்று மீனா சொல்லுகிறார்.
அவருக்கும் இவருக்கும் ஏற்கனவே ஒரு சின்ன பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கு அதை காரணமா வச்சு தான் இவரு முடிவு பண்றாரு என்று சொல்ல ரோகிணி முத்துவுக்கு ஈகோ பிரச்சனை இருக்கு என்று சொல்லுகிறார். அப்படியெல்லாம் இல்ல ரோகினி அவர் மனசுல அருணை பத்தின தப்பான அபிப்ராயம் இருக்குது அதனாலதான் இப்படி நடந்துக்கிறார் என்று சொல்ல உடனே சுருதி அந்த நீத்து இவனோட அருமையே தெரிய மாட்டேங்குது அதனால வெளியே வந்து தனியா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்னா கேட்கவே மாட்டேங்குறான் நம்ம ரெண்டு பேரும் ரொம்ப பாவம் மீனா என்று சொல்ல ரோகினி ஹஸ்பண்ட் எவ்வளவோ மேல் என்று சொல்லுகிறார். உடனே ரோகிணி என்னோட விஷயம் தாங்க ரொம்ப கஷ்டம் அவரு ஆன்ட்டி பேச்சைக் கேட்டு என்கிட்ட பேசவே மாட்டேங்கிறார் என்று சொல்ல, உடனே சுருதி எங்க மேல எந்த தப்பும் இல்ல ரோகினி ஆனாலும் எங்க ஹஸ்பண்ட் எங்க பேச்சைக் கேட்க மாட்டாங்க ஆனா நீங்க அவ்வளவு தப்பு பண்ணி இருக்கீங்க அப்படி இருக்கும்போது எப்படி உடனே சரியாகும் என்று கேட்க மீனாவும் அதையே சொல்லுகிறார்.
முதல்ல உங்க புருஷனை கரெக்ட் பண்ண கத்துக்கோங்க அவர் ஆன்ட்டி என்ன சொன்னாலும் அப்படியே கேட்கிறாரு என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கின்றனர்.மறுநாள் காலையில் விஜயாவிடம் மனோஜ் பேச வேண்டும் என்று சொல்ல முத்து மீனா அண்ணாமலை ரோகினி இருக்கின்றனர் என்ன விஷயம் சொல்ல இனிமே ரோகினி ஷோரூம்க்கு வரட்டும் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலையும் எதுக்கு நீ இப்போது இவ்வளவு பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்க எல்லாத்துக்கும் காரணம் உன்னுடைய பேராசை தான் அதுக்கு எதுக்கு அவங்கள பிரிச்சு வச்சுக்கிட்டு இருக்கு என்று சொன்னால் உடனே விஜயா சரி நீ ரோகினி எங்க வேணா கூட்டிட்டு போ, எப்படி வேணா இரு என்று சொன்ன உடனே மனோஜ் ரோகினி சந்தோஷப்படுகின்றனர். உடனே முத்து கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு அம்மா சொல்லி முடிக்கல என்று சொன்ன உடனே விஜயா இனிமேல் என்கிட்ட பேசாத உனக்கு எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
அந்த நேரம் பார்த்து மீனாவுக்கு போன் வர சீதா என்ன சொல்லுகிறார்? மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
