தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை பாலோவ் பண்ணும் நபர் முத்துவை தேடி வருகிறார். நீங்க சொன்னதெல்லாம் செஞ்சுட்டேனே ஆனா நீங்க இரண்டாவது வாட்டி பண்ண சொன்னது நான் முதல்வாட்டிலேயே கேட்டுட்டேன். பேரை கேட்டுட்டேன் டென்ஷன் ஆகி போயிட்டாங்க என்று சொல்ல சரி அதுக்கப்புறம் என்ன பண்ணனும் என்று கேட்கிறார். இன்னொரு வாட்டி பார்க்கும்போது நீங்க ரொம்ப அன்பானவங்களா இருக்கீங்க அதனால நான் உங்களை அன்புன்னு கூப்பிட போறேன் என்று சொல்லிட்டு உடனே கிளம்பிடு என்று சொல்லிக் கொடுக்க வரும் அங்கிருந்து சென்று விடுகிறார். மறுபக்கம் மனோஜ் விஜயாவை தனியாக ரூமுக்கு கூப்பிட்டு உனக்கு யாரும்மா ரொம்ப புடிக்கும் என்று கேட்க இதுல என்னடா சந்தேகம் உன்ன தான் என்று சொல்ல பாத்தியா ரோகினி எங்க அம்மாவும் என்னை மாதிரியே யோசிக்கிறாங்க என்று சொல்லுகிறார்.
இப்ப எதுக்கு இப்படி கொஞ்சிக்கிட்டு இருக்க ஏதாவது உனக்கு வேலை ஆகணுமா என்னன்னு சொல்லு என்று கேட்க ஷோரூம் இல் முட்டை இருந்த விஷயத்தையும் ஜோசியர் சொன்ன விஷயத்தையும் சொல்ல விஜய் அதிர்ச்சியாகி என்னால எல்லாம் முடியாது என்று சொல்லுகிறார். நான் வெள்ளிக்கிழமை விரதம் இருக்க மாட்ட என்னால ஒருவேளை கூட சாப்பிடாம இருக்க முடியாது இதெல தீச்சட்டி வேற எடுக்கணுமா என்னால முடியாது நான் சாப்பிடாம இருந்தா தான் என் உயிருக்கு ஆபத்து ஆகும். நீங்க ரெண்டு பேரும் என்ன பயமுறுத்திக்கிட்டு இருக்கீங்களா என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறார்.
இரண்டு மூன்று முறை மனோஜ் வற்புறுத்தியும் கேட்காமல் விஜயா வெளியே வர விஜயாவின் தலையின் பக்கத்தில் ஃபேன் விழுகிறது. இதனால் மனோஜ் ஜஸ்ட் மிஸ்மா இல்லனா உங்க தலைமேல விழுந்திருக்கும் என்று சொல்லுகிறார்.உங்க தலை மேல விழுந்திருந்தா மண்டை உடைந்து மூளை வெளியே வந்துட்டு இருக்கும் என்று சொல்ல நடக்காததெல்லாம் சொல்லி என்ன பயமுறுத்த பாக்குறியா என்னால எல்லாம் செய்ய முடியாது என்று விஜய் ரூமுக்குள் சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் முத்து மீனாவை கூப்பிட்டு தண்ணி வரல என்று சொல்ல, மோட்டார் போட்டியா என்று கேட்கிறார் எப்பவுமே மாமா வாக்கிங் போகும்போது போட்டுட்டு தான் போவாரு மோட்டார் ரிப்பேர் ஆயிட்டு இருக்கும் என்று சொல்ல உடனே விஜயா ,மனோஜ், ஸ்ருதி ,ரோகினி,ரவி என அனைவரும் தண்ணீர் இல்லாமல் வேலைக்கு போக முடியல என்று பேசிக்கொண்டே இருக்க உடனே முத்து மெக்கானிக்கு போன் போட வேலையா இருக்க வந்துடறேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். அந்த நேரம் பார்த்து தண்ணி லாரி சத்தம் கேட்க, விஜயா தண்ணி வேணும்றவங்க போய் புடிச்சுக்கோங்க என்று சொல்லி அனுப்புகிறார். எல்லோரும் குடத்தை எடுத்துக் கொண்டு போக ரோகினியை எதுக்கு இதெல்லாம் செய்ற என்று மனோஜ் சொல்லுகிறார். நமக்கு தண்ணி வேணும்னா நம்ப தான போயிருக்கணும் என்று சொல்ல விஜயா நீ ஏமா போற உங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா என்ன ஆகும் என்று கேட்கிறார். உடனே அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ஆன்ட்டின்னா போயிட்டு வரேன் என்று சொல்ல ஸ்ருதி வந்து நிற்கிறார்.
அனைவரும் தண்ணீர் தூக்கிக் கொண்டு வர மீனா தண்ணீர் தூக்கி வருவதை பார்த்த ஸ்ருதி நானும் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி இடுப்பு மேல் வைத்து கீழே போட்டு விடுகிறார். உனக்கு தான் இது வரல இல்ல நீ போ நான் போய் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி ரவி அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு மெக்கானிக் வந்து சரி செய்து கொண்டிருக்க காயில் போயிட்டு இருப்பதாகவும் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மெயின் ஆப் பண்ணி வச்சிருக்க யாரும் ஆன் பண்ணாதீங்க சுவிட்ச் இல்ல கரண்ட் பாஸ் ஆகும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். யாரும் ஆன் பண்ண மாட்டாங்க நீங்க போயிட்டு வாங்க என்று முத்து சொல்லுகிறார். ஆனால் கீழே வந்த மனோஜ் வேலைக்கு டைம் ஆவது இங்கு யாரு இது ஆப் பண்ணி வச்சிருக்காங்க என்று சொல்லி மெயினை ஆன் பண்ணி விடுகிறார்.
என்ன நடக்க போகிறது? சுவிட்சை யார் தொட போகிறார்? யாருக்கு ஷாக் அடிக்கப் போகிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.