Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயாவுக்கு வந்த சந்தேகம், கடுப்பான மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

SiragadikkaAasai Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கொலு வைக்கும் முறையை சொல்வதைப் பார்த்து ஸ்ருதி கைதட்டி பாராட்டுகிறார். உங்களுக்கு நிறைய திறமை இருக்கும் என ஆன்ட்டி தான் உங்களை திட்டிக்கிட்டே இருக்காங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து விஜயாவும் அண்ணாமலையும் வருகின்றனர். உடனே ஸ்ருதி என்ன ஆன்ட்டி பாக்ஸ்ல வச்சிருக்காங்க என்று சொல்ல கொலு வைக்கப் போறாங்களாம் என்று சொல்லுகிறார். உங்களுக்கு ரொம்ப கைண்ட் ஹார்ட் ஆன்ட்டி உங்கள நல்லா யூஸ் பண்ணி இருக்காங்க என்று சொல்ல, உடனே முத்து இருமல் வந்தது போல் பண்ணுகிறார்.

எங்கம்மா நான் சொன்னா கேக்குறாங்க சரி ஏதோ குடும்பத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்க அதனால ஒத்துக்கிட்டேன் என்று சொல்லுகிறார். அண்ணாமலை பொம்மை எல்லாம் வாங்கிட்டீங்களா என்று கேட்க ஓரளவுக்கு வாங்கியாச்சு மாமா என்று மீனா அதுதான் எடுத்து வச்சு பாத்துட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். விஜயா சமைக்கிற வேலைய பாரு இதையே பாத்துட்டு இருக்காத என்று சொல்ல சமைச்சுட்டேன் அத்தை என்று சொல்லுகிறார். முத்து ஒரு பொம்மை எடுத்து பிரிக்க அதில் போஸ் கொடுப்பதை பார்த்த மீனா டான்ஸ் கிளாஸில் அந்த இருவரும் இப்படித்தான் கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தாங்க என்று சொல்லுகிறார். ஆனால் விஜயா அவங்க சிறுங்காரரசம் பண்ணாங்க என்று சொல்லுகிறார். இவங்களுக்கு என்ன தெரியப்போகுது என்று பேச அதற்கு மனோஜ் பரதத்த பத்தி இவங்களுக்கு என்ன தெரியும் என்று நக்கலாக பேசுகிறார். உடனே முத்து அந்த போஸை நீங்க பண்ணி காட்டுங்க என்று விஜயாவிடம் கேட்கிறார் அப்போது தெரிந்து விடும் யார் சொன்னது உண்மை என்று என சொல்ல முதலில் மறுக்கும் விஜயா அண்ணாமலை யுடன் சேர்ந்து அந்த போஸ் செய்கிறார். ஆனால் விஜயா செய்ததற்கும் டான்ஸ் கிளாஸ்சில் இருவரும் கட்டி பிடித்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. விஜயா அண்ணாமலையை பார்த்து தனியாக நின்று போஸ் கொடுக்கிறார். இதனால் அண்ணாமலையும் மீனா சொல்றதுல என்ன தப்பு இருக்கு அங்க இருக்குற பசங்கள உன்ன நம்பி தான் அனுப்புறாங்க ஏதாவது நான் உன் தலையை தான் உருட்டுவாங்க என்று சொல்லியும், விஜயா அதெல்லாம் இல்ல இத சாப்பாடு எடுத்துட்டு வர்றதுக்கு சோம்பேறித்தனம் பட்டுகிட்டு இப்படி எல்லாம் பேசுற இனிமே நீ சாப்பாடு எடுத்துட்டு வராதே என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபக்கம் மனோஜ் சோகமாக கம்பெனியில் உட்கார்ந்து கொண்டிருக்க ரோகினி என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஒரு 75 தேவைப்படுது கையில இருந்ததெல்லாம் ரொட்டேஷனுக்கு சரியா போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஒரு கஸ்டமர் வருகிறார். எல்லா பொருளையும் வாங்குவதற்கு லிஸ்ட் போடுகிறார் அதனைப் பார்த்து மனோஜ் ரொம்ப சந்தோஷப்பட்டு ரோகினி இடம் எப்படியோ 15 லட்சத்துக்கு வரும் நம்மளுக்கு ஒரு மூணு லட்சம் பிராஃபிட் கிடைக்கும் என்று சந்தோஷப்படுகிறார்.

ஆனால் அந்தக் கடையில் நடந்தது என்ன? விஜயா டான்ஸ் கிளாஸில் என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update
SiragadikkaAasai Serial Episode Update