விஜயா ஓவராக பேச,மீனா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு முத்து போன் போட மீனா நடந்த விஷயங்களை மறைக்கிறார் காசு வந்துடுச்சா எல்லாருக்கும் கொடுத்துட்டியா என்று கேட்க இன்னும் வரலங்க நாளைக்கு கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார் கொடுத்தவுடனே அவருக்கு கடனை கொடுத்தது இருக்கிறவங்களுக்கு காசு கொடுத்து என்று சொல்ல மீனா கண்கலங்கி கொண்டே சரி நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு மீனா கண்கலங்கி அழுகிறார்.
மறுநாள் காலையில் மீனா அம்மா வீட்டுக்கு சென்று நடந்த விஷயங்களை பற்றி பேசி அழுது கொண்டே இருக்க உனக்குன்னு ஏன் இப்படி வருதுன்னு தெரியல என்று சொல்லி வருத்தப்படுகிறார் மீனா பேசாம நான் பூ கட்டிக்கிட்டு குடுத்திட்டு இருக்கணும் போல நானும் டெக்கரேஷன் வேலை எல்லாம் செஞ்சிருக்க கூடாது என்று சொல்ல அதற்கு மீனாவின் அம்மா நம்ம முன்னேறவே கூடாதா அப்படியே இருக்கணுமா என்று சொல்லுகிறார். சீதா பத்திரத்தை படிக்க தெளிவா ஏமாத்த பிளான் பண்ணி இருக்காங்க அக்கா என்று சொல்லுகிறார். அதற்கு மீனா நான் இப்போ என்ன பண்ணப் போறேன்னு தெரியல மண்டபம் ஓனர் கிட்ட கூட போய் கெஞ்சி விட்டேன் என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மீனாவின் அம்மா நீ பூ கொடுக்கும் இடத்தில் தெரிந்த இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிப் பாரு என்று சொல்ல, மீனா அவரை சந்திக்க சத்தியா உடன் வருகிறார். பத்திரத்தை படித்தவர் தெளிவா கையெழுத்து போட்டு இருக்கீங்க இது கேஸ் எடுத்தாலும் செல்லாது அவங்க பக்கம் தான் ஜெயிக்கும் என்று சொல்ல, மீனா என்ன செய்வது எனப் புரியாமல் இருக்கிறார். இது என்னோட காசா மட்டும் இருந்தா கூட பரவால்ல என்ன நம்பி ஒரு ரூபா கூட வாங்காம வேலை செஞ்சு இருக்காங்க அவங்களுக்கும் கொடுக்கணும் என்று சொல்ல ஒரு பத்திரத்தில் கையெழுத்து போடும்போது கடைசி வரைக்கும் எழுதி இருக்கா என்று பாக்கணும் இல்லன்னா எது வேணாலும் எழுதிப்பாங்க உஷாரா இருக்கா என்று சொல்லிவிட்டு நான் அன் அபிசியலா விசாரித்து பார்க்கிறேன் என்று சொல்ல, மீனா வெளியில் வந்து விட்டேன் முட்டாளா இருந்திருக்கிறேன் என்று சொல்லி அழ சத்தியா பணம் கிடைச்சுடும்கா என்று சொல்லுகிறார்.
உடனே முத்து ஃபோன் போட்டு பணம் எல்லாம் கொடுத்துட்டியா மீனா என்று கேட்க, இன்னும் இல்லங்க நாளைக்கு தரேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல எப்பவுமே முதல்ல கொடுத்துடுவாங்க என்ன ஆச்சு என்று கேட்க அவங்களுக்கு காசு வரலையா குடுக்குறான்னு சொல்லி இருக்காங்க சொல்லி பேசி விட்டு ஃபோனை வைக்கிறார். மாமா கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் இல்ல என்று சொல்ல அவரை கஷ்டப்பட்ட கார் ஓட்டுகிறார் என் கஷ்டம் என்னோட போகட்டும் அவரும் நிம்மதி இல்லாம எதுக்கு இருக்கணும் நான் வீட்ல போய் சமைக்கிறேன் நீ வீட்டுக்கு போ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார்.
வந்தவுடன் விஜயா சமைக்காம எங்க போய் சுத்திட்டு வர என்று சொல்ல சமைக்கிறேன் என்று சொல்ல மாமாவுக்கு சமைக்கிறதையே இன்னைக்கு நீங்களும் சாப்பிட்டுங்க என்னால தனியா சமைக்க முடியாது எனக்கு மனசு சரியில்லை என்று சொல்ல என்ன மனசு சரியில்லை என்று கத்துகிறார். ஏன் உங்களுக்கு தெரியாதா என்று மீனா பதிலடி கொடுக்க எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லுகிறார்.அதுதான் அழிஞ்சு போயிடும் வெளியே இருக்காங்களே அவங்க கிட்ட போய் கேளுங்க சிந்தாமணி கிட்ட போன் பண்ணி கேளுங்க சந்தோஷமா சொல்லுவாங்க என்று விஜயா வாயை அடக்குகிறார்.
அந்த நேரம் பார்த்து அண்ணாமலை வர என்ன சொல்லுகிறார்?மீனாவிற்கு என்ன ஐடியா கிடைக்கிறது? என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
