Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா சொன்ன வார்த்தை, மகிழ்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

SiragadikkaAasai Today Episode Update

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவை பெண்பார்க்க வந்தவர்கள் அவரை மிகவும் பிடித்ததால் ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க பேசலாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றன சீதா அம்மாவும் நல்ல நாள் பார்த்துட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைக்கிறார்.

சத்யா சீதாவிற்கு ஸ்வீட் கொடுக்க அவர் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்று சொல்ல ஏன் என்று எல்லாரும் கேட்கின்றனர் முத்து உனக்கு வரப்போற மாப்பிள்ளை எப்படி இருக்கனும் ஒரு ஐடியா இருக்குல்ல அதை சொல்லு என்று சொல்ல முதலில் சொல்ல மறுக்கும் சீதா பிறகு சொல்லுகிறார். குடிக்கக்கூடாது என்று ஆரம்பிக்க முத்து நைசாக என்ன நம்ம பக்கம் திரும்பறாங்க என்று நம்ப மிச்சர் சாப்பிடுவோ என்று சாப்பிடுகிறார்.எந்த கெட்ட பழக்கம் உங்களுக்கு கூடாது. நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிற பாதி பணம் அம்மாகிட்ட தான் கொடுப்பேன். ஒரே குழந்தை தான் பெத்துப்ப என்றெல்லாம் கண்டிஷன் சொல்லுகிறார். இந்த கண்டிஷனுக்கெல்லாம் இந்த மாப்பிள்ளையும் ஒத்துக்கலாம்ல என்று சொல்ல என்ன மாப்ள அவ தான் பேசிட்டு இருக்காங்க நீ அவள் கூட சேர்ந்து கேட்டுட்டு இருக்கீங்க என்ற சொல்ல இந்த பையனும் அதுக்கு சம்மதிக்கலாம் அத்தை நம்ம பேசி பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.

பிறகு வித்யா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கதவைத் தட்ட தண்ணி கேன் போட ஆள் வந்திருப்பதாக நினைத்து உள்ளே கூப்பிடுகிறார் உடனே உள்ளே வர PA என தெரிய வந்தவுடன் பிச்சைக்காரன் ஏண்டா வீட்டுக்குள்ள வர என்று கேட்கிறார். ரோகினி போன் பண்ணா எடுக்கல பார்லர் போனா அங்கேயும் ஆன்லைன்ல அவளுக்கு ஒரு போன் பண்ணு என்று சொன்ன எதுக்கு அவளுக்கு பணம் கேட்டு பிளாக் மெயில் பண்ணவா என்று கேட்டு அதெல்லாம் பண்ண முடியாது நான் உனக்கு போலீஸ்க்கு போன் பண்றேன் என்று போன எடுக்க பண்ணு என்று சிரிக்கிறார். நான் பண்றது விட அவ நல்லா பண்ணிக்கிட்டு இருக்கா ஒரு குடும்பத்தையே பொய் சொல்லி ஏமாற்றி தின்னுட்டு இருக்கா, அவ புருஷன் ஒரு முட்டாளா இருக்கா ஏற்கனவே என்னை நேரில் பார்த்திருக்கான். அன்னைக்கு கோயில்ல பார்த்தப்ப நான் யாருன்னே தெரியாத மாதிரி பார்க்கிறான். அதனாலதான் ரோகினி அவன ஈசியா ஏமாத்துறா என்று சொல்லுகிறார்.

வித்யா ரோகினிக்கு போன் போட ரோகினி போன் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா வந்து எடுக்கிறார் அவர் உடனே பிஏ வந்துருக்காண்டி என்று சொல்ல ரோகினி போனை வாங்கி விடுகிறார்.பிறகு சொல்லுங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா என்று எதுவும் தெரியாதது போல் பேச பணம் இன்னும் ரெடி ஆகலையா என்று கேட்க ஒரு மாசம் ஆகும் என்று டைம் கேட்கிறார். நான் வர வீடு பார்த்து வெச்சிட்டேன் சீக்கிரமா குடுக்க பாரு என்று சொல்ல ஒரு மாசம் சொல்ல முடியாது சீக்கிரமா குடு இல்லன்னா இன்னைக்கு வித்யா வீட்டுக்கு வந்து இருக்கேன் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்துடுவேன் என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார். சரி யாரோ பக்கத்துல இருக்காங்கன்னு நினைக்கிறேன் நான் அப்புறம் பேசுறேன் என்று கிளம்பி விடுகிறார். பிறகு விஜயா யார் அந்த பிஏ என்று கேட்க பழனியப்பன் என்பவரை நாங்கள் பி ஏ என்று ஷார்ட்டா கூப்பிடுவோம் அவர் எங்க அப்பா கூட வேலை செஞ்சவர் என்று சொல்ல விஜயாவும் நம்புகிறார். இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் உங்க அப்பா ஜெயில்ல இருப்பாரு என்று சொல்லுகிறார். பிறகு ஆன்லைன் கிளாஸ் விஷயமா பணத்துக்காக பேசிக்கிட்டு இருந்தோம் என்று சொல்ல, உங்க அப்பா கிட்ட கேட்க வேண்டியதானே என்று விஜயா சொல்லுகிறார் அதற்கு அப்பாவோட அக்கௌன்ட் எல்லாம் க்ளோஸ் பண்ணி வச்சிருக்காங்க என்று சொல்ல அவர் அக்கவுண்ட்ல 30 கோடி இருக்குமா? என்று கேட்க 30 கோடியா 300 கோடி இருக்கும் என்று ரோகினி சொல்லுகிறார் இதனால் விஜயா வாயடைத்து போகிறார்.

வாயைப் பிளந்து கொண்டு வெளியே வந்த விஜயாவை பார்த்து அண்ணாமலை வாய மூடு உள்ளே ஈ போகிறது என்று சொல்ல, என்னங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா ரோகினி ஓட அப்பா அக்கவுண்ட்ல 300 கோடி பணம் இருக்கா என்று சொல்ல அதற்கு நாம என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார் என்னங்க இப்படி பேசிகிட்டு இருக்கீங்க ரோகிணி அப்பாக்கு அப்புறம் பணம் ரோகிணிக்கு வந்துரும் ரோகினிக்கு வந்தா மனோஜ்க்கு வந்த மாதிரி என்று சந்தோஷப்படுகிறார். உடனே பூஜை ரூமுக்கு சென்று சாமி கும்பிட்டு சந்தோஷப்படுகிறார்.

பிறகு மீனாவும் முத்துவும் காரில் வந்து கொண்டிருக்க மீனாவை பார்த்துக் கொண்டே வர ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க எதுக்கு என்னை பார்த்து கிட்டு இருக்கீங்க என்று கேட்க இப்போ சீதா கிட்ட அவ கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை எப்படி எல்லாம் இருக்கணும்னு ஒரு லிஸ்ட் சொன்ன இல்ல அது மாதிரி உனக்கு ஏதாவது இருக்கா என்று கேட்க அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று முதலில் சொல்லுகிறார் ஆனால் சொல்லும் என அது எப்படி இல்லாம இருக்கும் என்று சொன்னவுடன் அதெல்லாம் இப்ப எதுக்குங்க வேணா என்று சொல்லியும் பிறகு முத்து வற்புறுத்தி கேட்க சொல்லுகிறார்.

முதலில் ஒரு டிகிரி வாங்கி இருக்கணும் என்று சொல்ல காரை பிரேக் போட,மேலும் எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது என்று சொல்ல மீண்டும் வண்டியை நிறுத்துகிறார். இது மாதிரி எத்தனை வாட்டி நிறுத்துவீங்க போங்க என்று மீனா சொல்லுகிறார். சரி சரி சொல்லு என்று சொல்ல எனக்கு எங்க வீட்ல கஷ்டப்படுற அதனால ஒரு கவர்மெண்ட் மாப்பிள்ளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன் என்று சொல்ல இது எதுலயுமே நான் இல்லையே என்று முத்து சொல்ல ஆனா இன்னும் ஒன்னு இருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க போறவரே என்ன அன்பா பாசமா பார்த்துக்கணும் என்று சொன்னவுடன் முத்து சிரிக்கிறார். நீங்க 100% என்ன அப்படி பாத்துக்குறிங்க அது போதும் எனக்கு என்று சொல்லுகிறார்.

ரோகினி சிட்டியை வந்து பார்க்க என்ன சொல்லப் போகிறார்?சிட்டியின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Today Episode Update