Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபப்பட்ட முத்து.வருத்தத்தில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai episode update 08-09-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்துவும் மீனாவும் கிரிஷ்ஷை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர்.

இதைப் பார்த்த விஜயா மீனா என்ன இது என்று கேள்வி கேட்க என்ன அத்தை என்று கேட்க எதையோ ஒன்ன தோளில் தூக்கிட்டு வந்து இருக்கீங்களே என்ன அது என்று கேட்க இது என்ன துண்டா குழந்தை என்று முத்து கோபப்படுகிறார். அது தெரியுது அதை எதுக்கு இங்க தூக்கிட்டு வந்தீங்க என்று திரும்பவும் கேள்வி கேட்க மீனா இவனை தெரியலையா அத்தை தாலி பிரித்து போடும் பங்க்ஷனுக்கு இங்கு வந்து இருந்தாங்களே என்று கூறுகிறார். அது தெரியுது இப்ப எதுக்கு தூக்கிட்டு வந்தீங்க என்று சொல்ல இவங்க பாட்டி வர வழியில மயங்கி விழுந்துட்டாங்க ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கோம் என்று சொல்ல இவனை எங்கேயாச்சு ஆசிரமத்தில் விட வேண்டியதுதானே என்று மோசமாக பேச இதை கேட்டு ரோகிணி கண் கலங்கி நிற்கிறார்.

முத்து உங்கள மாதிரி எல்லாம் மனசாட்சி இல்லாம இருக்க முடியாது என்று விஜயா பேசும் ஒவ்வொன்றிற்கும் பதிலடி கொடுத்து அவங்க பாட்டி கண் முழிக்கிற வரைக்கும் இவன் இங்கதான் இருப்பான் என்று சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

மீனா அவனுக்காக பால் காய்ச்ச போக திரும்பவும் அங்கு வரும் விஜயா கண்டபடி பேச மீனா கண்டுகொள்ளாமல் உள்ளே போக நான் பேசிட்டு இருக்கேன் நீ போயிட்டே இருக்க என்று கேட்க நீங்க பேசுங்க அத்தை எனக்கு வேலை இருக்கு நீங்க தனியா பேசுங்க என்று பதிலடி கொடுக்கிறார். தனியா பேச நான் என்ன பைத்தியமா என்று கேட்க அதை நான் எப்படி அத்தை சொல்ல முடியும் டாக்டர் கிட்ட போய் கேளுங்க என்று பதில் அளிக்கிறார்.

பிறகு ரோகிணி அம்மாவை பார்ப்பதற்காக பேக்கை எடுத்துக் கொண்டு வேக வேகமாக கிளம்ப விஜயா எங்கம்மா கிளம்பிட்ட என்று கேட்க கொஞ்சம் பார்லர் வரைக்கும் போயிட்டு வரேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறார். இங்க நடந்த கூத்தையெல்லாம் பாத்தியா அந்த தரித்திரம் புடிச்சவங்களை என்று விஜயா பேச ஆரம்பிக்க ரோகினி அதையெல்லாம் கேட்க முடியாமல் எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட் ஆன்ட்டி போயிட்டு வந்துடறேன் என கிளம்பிச் செல்கிறார்.

அதைத்தொடர்ந்து ரோகினி ஹாஸ்பிடல் வந்து அம்மாவை பார்த்து நலம் விசாரித்துவிட்டு நீ எதற்கு இங்கே வந்த இப்போ க்ரிஷ் முத்து, மீனாவோட வீட்டுக்கு வந்து இருக்கான். என்னை மாட்டி விடுறதுக்குனே இப்படி பண்றியா என கோபப்படுகிறார். இல்லடி எனக்கு உடம்பு முன்ன மாதிரி இல்ல எதுவும் ஞாபகம் இருக்க மாட்டேங்குது யாரும் இல்லாம நான் தனியா செத்து கிடந்தா கூட எனக்கு கவலை கிடையாது. ஆனால் க்ரிஷ் தனி மரமா நின்னுடுவானே, அதான் அவன உன்கிட்ட விட்டுட்டு போலாம்னு வந்தேன் உன்கிட்டனா உன்கிட்ட கூட இல்ல வித்யா கிட்ட விட்டுட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்ல நர்ஸ் வந்து மாத்திரைகளை வாங்கி வர சொல்லி அனுப்ப ரோகிணி வெளியே போக முத்து, மீனா, கிரஷ் மூவரும் ஆஸ்பிட்டலுக்கு வர ஓடி வந்து ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறார்.

முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மாவிடம் நலம் விசாரிக்கின்றனர். யார் வீட்டுக்கு வந்தீங்க உங்க பொண்ண பார்க்க வந்தீங்களா அவங்க நம்பர் சொல்லுங்க மாப்ள வீட்டுக்காரங்க நம்பர் சொல்லுங்க என்றெல்லாம் தொடர்ந்து கேள்வி கேட்க ரோகிணி பதற்றத்தில் தவிக்கிறார். அவருடைய அம்மா பொண்ணு இப்போ இங்க இல்ல துபாய் போய் இருக்கா அவளை அனுப்பி வைக்க தான் வந்தேன். அவ கெளம்புனதும் ஊருக்கு கிளம்பும் போது தான் இப்படி ஆயிடுச்சு நான் ஊருக்கு போய் பாத்துக்குறேன் எனக்கு இப்போ ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் மீனாவுக்கு இவர் சொன்ன விஷயங்களில் சந்தேகம் வருகிறது. அவரை பார்க்க யாரோ சொந்தக்காரர் வந்ததா சொல்றாங்க அது அவங்க பொண்ணா கூட இருக்கலாம். எனக்கு ஏதோ தப்பா படுகிறது என முத்துவிடம் கூறுகிறார்.

sirakadikka aasai episode update 08-09-23
sirakadikka aasai episode update 08-09-23