தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாட்டி வீட்டில் மீனா நானே சமைக்கிறேன் என விறகடிப்பில் சமைக்க செல்கிறார்.
அடுத்து பாட்டி முத்துவுக்கு காபி கொடுத்து மனோஜ் பற்றி கேட்க மொத்த பணத்தையும் ஒரு பெண்ணிடம் ஏமாந்த விஷயத்தையும் திரும்பவும் கல்யாணம் நடக்க போகும் விஷயத்தையும் சொல்ல பாட்டி சிரிக்கிறதா வருத்தப்படுவதானே தெரியல என சொல்கிறார்.
ஆனா ஒன்னு மட்டும் மீனாவை கலங்க வச்சுட்டு போன பாவத்துக்கு நல்லா அனுபவிக்கிறான் என சொல்கிறார். பிறகு கட்டிக்கிட்டு வந்த பொண்ணு நல்லபடியா பாத்துக்கணும் அவன்தான் நல்ல புருஷனுக்கு அழகு என்று சொல்ல முத்து மீனாவை பார்க்கிறார். பிறகு முத்து பசங்களோட விளையாடிட்டு வரேன் என சொல்லி வெளியே கிளம்ப பாட்டி சீக்கிரம் வந்துவிடு என சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கம் அண்ணாமலை பென்ஷன் விஷயமாக யூனியன் ஆபீஸ் கிளம்ப அந்த நேரம் பார்த்து ரோகினி தன்னுடைய தோழியுடன் வீட்டுக்கு வர விஜயா அவர்களை வரவேற்கிறார். பிறகு ரோகிணி பியூட்டி பார்லரை திறக்கப் போவதாக சொல்லி தாம்பூல தட்டில் பழம் வைத்துக் கொடுத்து விஜயா அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.
பிறகு விஜயா இவர் கல்யாணத்தை சிம்பிளா கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் என்ற விஷயத்தை சொல்ல ரோகிணி அங்கிள் சொல்றதும் சரிதானே வாழ்நாள் முழுக்க சம்பாதிக்கிற பணத்தை கல்யாணம் என்ற பெயரில் எதுக்கு ஒரே நாளில் செலவு பண்ணனும்? அங்கிள் சொல்ற மாதிரியே செய்யலாம் என சொல்ல பரவால்ல இந்த வயதிலேயே நல்ல மெச்சூரிட்டியா இருக்க என அண்ணாமலை பாராட்டுகிறார்.
பிறகு அண்ணாமலை மனோஜ் இருவரும் வெளியே கிளம்பியதும் விஜயா கல்யாணத்தை பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க ரோகிணி அவர் இந்த கல்யாணத்துக்கு வருவார்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். சரி நான் அத பத்தி கேட்கல நீ கவலைப்படாத என சொல்கிறார்.
இருந்தாலும் பணம் வராது போலையே என விஜயாவின் மனம் பரிதவிக்கிறது. அதன் பிறகு ரோகிணி வீட்டு கிளம்ப அவரது தோழி நீ போட்ட ட்ராமாவை நானே நம்பிட்டேன் அவ்வளவு அருமையா நடிக்கிற என சொல்லி சிரிக்கிறார்.
இங்கே பாட்டி வீட்டில் முத்து இன்னும் வராததால் பாட்டி நான் போய் அவனை கூட்டிட்டு வரேன் என வெளியே கிளம்ப நானே போய் கூட்டிட்டு வரேன் எப்படி போனும்னு மட்டும் வழி சொல்லுங்க, எனக்கும் ஊர சுத்தி பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு என்று சொல்லி மீனா கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.