Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனாவிற்கு சாபம் விட்ட விஜயா. ஸ்ருதியின் அம்மா அப்பா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka-aasai-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை பாத்திரத்தை எடுத்து மீனாவிடம் கொடுக்க விஜயா ரோகினி மனோஜ் ஆகியோர் அதிர்ச்சி அடைய முத்து சந்தோஷப்படுகிறார்.

மீனா ஐயோ மாமா எதுக்கு என்கிட்ட கொடுக்குறீங்க அத்தை கிட்டயே இருக்கட்டும் என்று சொல்ல என் வீட்டு பத்திரத்தை எனக்கே நீ பிச்சை போடுவியா என விஜயா கோபப்படுகிறார். என் வீட்டு பத்தாவது எதுக்கு அவ கிட்ட கொடுக்கறீங்க ரோகிணி தான பணத்தை கொடுத்து வீட்டை மீட்டா அவ கிட்ட குடுங்க என்று சொல்ல அண்ணாமலை இனிமே உன்ன எந்த ஒரு விஷயத்தையும் நம்பறதா இல்லை என சொல்லி மீனாவிடம் கொடுக்க முத்து வாங்கிக்கோ பீரோவில் வைத்து பத்திரமா பூட்டு நீங்க அக்யூஸ்ட் அதிகமாக்கிட்டே போறாங்க என கூறுகிறார்.

பிறகு இருவரும் வெளியே கிளம்ப விஜயா மீனாவிடம் வந்து முத்துவாலேயே நீ கலங்கி நிற்ப என சாபம் விடுகிறார். மேலும் இந்த பத்திரம் எப்படி என் கைக்கு வருதுன்னு மட்டும் பாரு என சவால் விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து விஜயா மனோஜிடம் சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்க உனக்கு வேலை இல்லை என்று தெரிந்தால் முத்து சும்மா விடமாட்டான் என கூறுகிறார். அதன் பிறகு ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ஐஸ் கிரீம் பார்லர் சந்தித்து பேசிக்கொண்டு இருவரும் மாறி மாறி ஐஸ்கிரீம் சாப்பிட அதை சுருதியின் அப்பாவும் அம்மாவும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

ஸ்ருதிக்கு வேறொரு கல்யாணம் செய்ய அவரது அப்பா முடிவு எடுக்கிறார். அதேபோல் விஜயா பார்வதி வீட்டுக்கு வந்து மீனாவின் மீது இருக்கும் கோபத்தை கொட்டி தீர்க்கிறார். மேலும் ரவிக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணு என பார்வதி சொல்ல எனக்கு தெரிந்த பிரண்டு ஒருத்தன் பெரிய பணக்கார வீட்டுக்கு வாழ போய் இருக்கா அவளுடைய பொண்ணு படிப்ப முடிச்சுட்டா அவளை ரவிக்கு பேச போறேன். ரோகிணி மாதிரி பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் இந்த வீட்ல என்னோட கை ஓங்கும் என சொல்லி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்று சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
sirakadikka-aasai-episode-update