Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனாவிடம் உண்மையை சொன்ன ஸ்ருதி. கோபப்பட்ட முத்து.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka-aasai-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகினி பியூட்டி பார்லருக்கு விஜயா சென்று இருந்த நிலையில் ஒரு வழியாக விஜயாவை சமாளிக்கின்றனர்.

அடுத்ததாக மீனா வீட்டில் இருக்கும் போது ஸ்ருதி வீட்டுக்கு வந்து ரவியும் நானும் காதலிக்கிறோம் என்று விஷயத்தை சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். இத மட்டும் அத்தை கேட்டா அவ்வளவு தான் என சொல்லி ரூமுக்கு அழைத்துச் சென்று பேச இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் கொஞ்சம் பொறுமையா இருங்க என மீனா கூறுகிறார். ஆனால் ஸ்ருதி எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க, பொறுமையா இருக்க முடியாது நான் உங்களுக்கு உதவி செய்தேன்ல நீங்க எனக்கு இந்த உதவி செய்யுங்க, நீங்கதான் ரவி கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும் என கூறுகிறார்.

பிறகு சுருதி வீட்டுக்கு வர அவருடைய அப்பா அம்மா கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு என அதிர்ச்சி கொடுக்கின்றனர். ஸ்ருதி மாப்பிள்ளையை எனக்கு புடிக்கல என்னுடைய கல்யாணத்தை முடிவு பண்ண உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது என கோபப்படுகிறார்.

தன்னுடைய அப்பாவிடம் எல்லாமே எனக்கு பிடிச்சதா இருக்கணும்னு ஆசைப்படுவீங்க ஆனால் இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கல என சொல்ல அவர் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை உனக்கு எது நல்லதோ அதுதான் நான் செய்வேன் இதுவும் நல்லது என்று உனக்கு போக போக புரியும் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இனிமேல் டப்பிங் பேச போகக்கூடாது மாப்பிள்ளைக்கு அது பிடிக்கல எனவும் தடை போடுகிறார். இங்கே முத்து வீட்டுக்கு வந்ததும் மீனா வீட்டுக்கு ஸ்ருதி வந்து ரவியை காதலிப்பதாக சொன்ன விஷயத்தை சொல்ல முத்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் மீனாவுடன் அவரது வீட்டுக்கு வரும் முத்து சீதாவை ரவிக்கு பெண் கேட்கிறார்.

sirakadikka-aasai-episode-update
sirakadikka-aasai-episode-update