Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ருதி எடுத்த முடிவு. மீனா அம்மா எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka-aasai-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து படத்தை கொடுத்து சீதாவை பெண் கேட்க அவரது அம்மா வேண்டாம் மாப்பிள்ளை, இந்த கல்யாணம் நடக்காது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

கல்யாணம் ஆன பிறகு முக்காவாசி நேரம் மாமியாரோட தான் இருக்கணும் அப்படி இருக்கும் போது நல்ல மாமியார் அமையலனா அவங்களுக்கு தண்டன வாழ்க்கை போராட்டம் தான் மீனா ஏற்கனவே நிறைய கஷ்டப்படுற ஆனா அவை எதையும் சொல்றது கிடையாது ஏன் இன்னொரு பெண்ணையும் அனுப்பி கஷ்டப்பட வைக்க விரும்பல என சொல்ல முத்து அப்ப என் வார்த்தைக்கு அவ்வளவு தான் மரியாதை என கோபப்பட்டு வந்து விடுகிறார்.

பிறகு மீனா முத்துவை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய உனக்கு திரும்பத் திரும்ப சீதாவுக்கும் ரவிக்கும் கல்யாணம் செய்து வைக்கணும் என்பதை பற்றி பேசுகிறார்.

மறுபக்கம் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம், நீங்க சொல்ற பையனையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா இந்த கல்யாணத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளி போடுங்க என்று சொல்ல ஸ்ருதின் அம்மாவும் அப்பாவும் அதற்கு வாய்ப்பே இல்லை பிளான் பண்ண மாதிரி கல்யாணம் நடக்கும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். பிறகு சுருதி ரூமுக்கு வந்து யோசிச்சு ஒரு முடிவு எடுக்கிறார்.

அடுத்ததாக முத்து மீனா வீட்டுக்கு வர ரவி ரெஸ்டாரன்ட் கிளம்ப அப்போது முத்து திரும்பவும் அந்த பொண்ணு கிட்ட பேசுற வேலை வெச்சுக்காத என எச்சரிக்க ஸ்ருதி போன் செய்ய ரவி எடுக்காமல் இருந்து விடுகிறார். பிறகு ரெஸ்டாரன்ட் கிளம்பியதும் விட்டு அந்த பொண்ணு தான் போன் பண்ணுச்சி ஆனால் ரவி எடுக்கல கொஞ்சம் கொஞ்சமா நம்ம வழிக்கு வர ஆரம்பிச்சுட்டேன்.

சீக்கிரமா அவனுக்கு சீதா மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடணும் என திட்டம் போடுகிறார். அடுத்து ரவி போன் எடுக்காததால் நேராக ரெஸ்டாரண்ட் வரும் ஸ்ருதி எனக்கு ஒரு பதில் கிடைக்காம நான் இங்க இருந்து போகப் போறது இல்லை என ஹாட்டலில் உட்கார்ந்து கொண்டு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
sirakadikka-aasai-episode-update