தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதி மற்றும் மாப்பிள்ளை என இருவரும் டிரஸ் எடுக்க வந்த இடத்திற்கு வர ஸ்ருதி மகிழ்ச்சி அடைகிறார்.
இதனை தொடர்ந்து மனோஜ் இன்டர்வியூக்காக செல்வதற்கு விஜயாவிடம் பணம் கேட்க விஜயா என்கிட்ட பணம் இல்ல போய் உங்க அப்பா கிட்ட கேளு என சொல்ல மனோஜ் பணம் கேட்க வர அங்கு முத்து இருப்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க பிறகு அண்ணாமலை முத்துவிடம் 500 ரூபாய்க்கு சில்லறை வாங்கிக்கொண்டு அவரை அனுப்ப மனோஜ் சம்பளம் தரவில்லை என பொய் சொல்லி அண்ணாமலையிடம் 300 ரூபாய் வாங்கிக்கொண்டு கிளப்புகிறார்.
வழக்கம்போல மனோஜ் பார்க்கிற்கு வர இதை பார்க்கிற்கு வரும் ஒருவர் முத்துவின் காரில் சவாரியாக வந்து இறங்க அவர் கொடுத்த ரூபாய் நோட்டு அண்ணாமலை வைத்திருந்தது போலவே இருக்க அதை தேடி உள்ளே வருகிறார்.
முத்துவை பார்த்த மனோஜ் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து கடைசியில் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக் கொண்டு தப்பிக்கிறார். இங்கே ஸ்ருதி ரவிக்கு நன்றி சொல்லி நான் சொல்றது மட்டும் செய் இப்போ நாம உடனடியா கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று சொல்ல ரவியும் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
