தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டிருக்க சீப் டாக்டர் வந்து தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்று டாக்டர் சொல்லி விடுகின்றனர்.
மேலும் கொஞ்சம் சீரியஸ் தான் என்று சொல்ல விஜயா பதறி துடிக்கிறார். அப்பாக்கு ஒன்னும் ஆகாது அவரை காலையில் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்று முத்து ஆறுதல் சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து மீனாவுக்கு இந்த விஷயம் பூக்கட்டுபவர் ஒருவர் மூலமாக தெரிய வர பதறியடித்து ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார். இந்த நேரம் பார்த்து முத்து டாக்டரை பேச சென்று விட மீனா வந்ததும் எல்லோரும் திட்டி துரத்துகின்றனர். விஜயா நீ அவரைப் பார்த்தாலே அவருக்கு ஏதாவது ஆகிடும் இங்கிருந்து போ என்று திட்ட மாமா 100 வருஷத்துக்கு மேல ரொம்ப நல்லா இருக்கணும் அவர் எனக்கு கடவுள் மாதிரி நான் போகிறேன் அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லி கண்ணீரோடு மீனா அங்கிருந்து வெளியே வருகிறார்.
பிறகு சீப் டாக்டர் வந்து பார்த்துவிட்டு அவருக்கு இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கு, இரண்டு அடைப்பை மாத்திரை மூலம் சரி செய்து கொள்ளலாம். இன்னும் இரண்டு அடைப்பை ஸ்டர்ட் வச்சு தான் சரி செய்யணும், டாக்டர் இன்னைக்கு மட்டும் தான் இங்கே இருப்பாரு அதுக்குள்ள நான்கு லட்சம் ரூபாய் பணத்தை கட்டிடுங்க என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
விஜயா அவ்வளவு பணம் இல்லையே என கலங்குகிறார். இங்கு வேக வேகமாக கோவிலுக்கு வந்த மீனா நல்லவங்களை எதற்கு இப்படி சோதிக்கிற என் மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லி வேண்டி தலையை தண்ணீர் ஊற்றிக் கொண்டு அங்க பிரதர்ஷணம் செய்ய தொடங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.