Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாமல் சிம்பிளாக திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் மீனா, போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கோமதி பிரியா.

கோயம்புத்தூரை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் இந்த சீரியலுக்குப் பிறகு தெலுகு மலையாளம் உள்ளிட்ட சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கோமதி பிரியா விதவிதமான போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ‌

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உலாவரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.