தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
அதேபோல் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் சல்மாவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய கணவர் அருண் மற்றும் மகன் ஆரவ்வுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.