Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள்,வைரலாகும் வீடியோ

Sirakadikka Aasai serial actresses Manasilayo reels video

ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் சமீபத்தில் ரோகினியின் பேச்சைக் கேட்டு முத்து,மீனாவை அசிங்கப்படுத்தி பேசிவிட்டு செல்கிறார் ரோகினியின் அம்மா. மீனா வருத்தத்தில் இருக்க என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் சீரியல் ஒரு புறம் இருந்தாலும் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் மனசிலாயோ என்ற வேட்டையன் பட பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.