தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊருக்கு கிளம்ப மனோஜ் என்னம்மா அதுக்குள்ள கிளம்பிட்டாங்க என்று கேட்க கிளம்பினது நல்லது தான் என்னை எப்படியெல்லாம் பேசுறாங்க அப்புறம் ஸ்ருதியும் ரோகினியும் என்னை எப்படி மதிப்பாங்க என்று புலம்புகிறார்.
பிறகு ரவி மற்றும் ஸ்ருதி பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க பாட்டி பணம் கொடுத்ததை பார்த்ததும் மனோஜ் ரோகிணியை கூட்டி வந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பணம் வாங்குகிறார். அதைத்தொடர்ந்து பாட்டி ரூமுக்குள் சென்று மீனாவிடம் நகை எல்லாம் என்னாச்சு ஏன் வெறும் கழுத்தோட இருக்க என்று மீனா சமாளிக்க முயற்சி செய்ய பாட்டி என்ன நடந்துச்சுன்னு சொல்லு என்று அதட்டுகிறார்.
உடனே மீனா நடந்த விஷயத்தை சொல்ல பாட்டி முத்துவை கூப்பிட்டு நீ உங்க அம்மா பேசியதை கேட்டு சும்மாவா இருந்தேன் என்று திட்ட இல்ல பாட்டி மீனாவே பயங்கரமா திட்டி விட்டுட்டா, அம்மாவே பயந்து போய்ட்டாங்க என்று சொல்கிறார்.
பிறகு பாட்டி நான் பணம் தரேன் முதல்ல அவளுக்கு தாலி செயின் எடுத்து போடு என்று கூற வேண்டாம் பாட்டி அவர் சம்பாதித்த பணத்தில் போடுவார்னு சொல்லி இருக்கேன் என்று சொல்ல பாட்டி மீனா இந்த வீட்டோட பொக்கிஷம் தான் அவளை நல்லபடியா பார்த்துக்கோ எனும் அட்வைஸ் கொடுத்து விட்டு அண்ணாமலையிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு அண்ணாமலை உக்காந்திருக்க விஜயா பால் கொண்டு வந்து கொடுக்கிறார். அம்மா எல்லாரும் கண்டிப்பா பொங்கலுக்கு ஊருக்கு வரணும்னு சொன்னாங்க என்று பேசிக்கொண்டு இருக்க மனோஜ் ரோகிணிக்கு லீவ் கிடைக்கும்ல என்று கேட்க மனோஜ் வெளியே வந்ததும் லீவு கிடைக்கும் தானே என்று அண்ணாமலை கேட்க விஜயா அதெல்லாம் ஒரு மாசம்னா கூட அவனை யாரும் எதையும் கேட்க மாட்டாங்க என கூறுகிறார்.
பிறகு ரோகிணி வெளியே வர அண்ணாமலை உனக்கு லீவு கிடைக்கும் தானே என்று சொல்ல விஜயா அதான் பார்லர்ல வேலை செய்றவங்க எல்லாம் இருக்காங்கல அவங்க பார்த்துப்பாங்க என்று சொன்னதும் ரோகிணியும் ஆமா என்று சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு சுருதி அரைகுறை உடையில் வந்து கொசு அடித்துக் கொண்டிருக்க அண்ணாமலை முகத்தை திருப்பி உட்காந்து கொள்கிறார். இதை பார்த்து பதறிய விஜயா டிரஸ் பத்தி பேச எனக்கு புடிச்ச மாதிரி நான் டிரஸ் போட்டு இருக்கேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அதன் பிறகு மீனா ஸ்ருதியை தனியாக கூட்டி சென்று வார்த்தையில மட்டும் இல்ல நாம செய்யற விஷயத்துலயும் மரியாதை குறையாமல் நடந்து கொள்ளணும் என அட்வைஸ் செய்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.