தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா துணி மடித்துக் கொண்டிருக்க ரூமுக்கு வரும் அனைத்து ரவி இந்த சம்பந்தம் கைவிட்டு போச்சுன்னு வருத்தப்பட்டானா என்று கேட்க அவர் அப்பவே ரெஸ்டாரன்ட் கிளம்பிட்டாரு பெருசா எதுவும் வருத்தப்பட்ட மாதிரி தெரியல என கூறுகிறார் மீனா.
அதைத் தொடர்ந்து முத்து உன்னை மாதிரி ரவிக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்கணும் நான் சந்தோஷமா இருக்க மாதிரி அவனும் சந்தோஷமா இருக்கணும் என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் என் மனசுல ஒரு பொண்ணு இருக்கு அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா ரவியோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் என கூறுகிறார். மீனா யார் யார் என்று கேட்க நேரம் வரும்போது சொல்கிறேன் என முத்து சவாரிக்கு கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக ரவி ரெஸ்டாரண்டில் இருக்க அங்கு வரும் ஸ்ருதி ரவியை வெளியே அழைத்துச் சென்று நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்க ரவி ஷாக் ஆகின்றார் விட்டார் இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேப்ப போல என்று கேள்வி கேட்க ஆமா பண்ணிக்கலாம் என கூறுகிறார்.
ரவி உனக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்க ஸ்ருதி தனக்கே வீட்டில் மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை சொல்ல ரவி எனக்கும்தான் வீட்ல பொண்ணு பார்த்தாங்க ஆனா பிரச்சனையாகி அவர்களே இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி போயிட்டாங்க என கூறுகிறார். அமைப்பதே கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்ல ரவி அவசரப்படாத பொறுமையா இரு என கூறுகிறார். ஆனால் ஸ்ருதி இனியும் உன்னிடம் பேசி ஒன்னும் நடக்க போறது இல்ல நான் பேச வேண்டிய இடத்துல பேசிக்கிறேன் என கோபமாக கிளம்பி வருகிறார்.
அடுத்து ரோகினி பியூட்டி பார்லரில் இருக்கும்போது விஜயா அங்கு வர போர்டில் பெயர் வேறு இருப்பதை மறைத்து பெயிண்ட் அடிப்பதாக சொல்லி சமாளிக்கிறார். விஜயா தலை வலிக்குது என்ன சொல்ல ரோகிணி மசாஜ் செய்து கொண்டிருக்க பியூட்டி பார்லர் ஓனர் வந்து விடுகிறார்.
இதனால் ரோகினியின் கண்ணில் வெள்ளரிக்காயை வைத்து விட்டு வெளியே வந்து ஓனரிடம் அக்கௌன்ட் காட்டிக் கொண்டிருக்க விஜயா வந்து விடுவாரோ என பதற்றத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.