Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு வந்த முத்து, ரோகிணி,விஜயாவை வச்சி செய்த மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 10-05-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனா ரவி ஆகியோர் ஸ்டேஷனுக்கு வர போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ள வாங்க என்று கூப்பிட்டு உட்கார வைத்து இவர்களுக்கு டீ வாங்கிட்டு வரச் சொல்கிறார்.

அடுத்து உண்மையாகவே உனக்கு கிடைச்ச பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க என்று மீனாவை பாராட்டுகின்றனர். அதன் பிறகு முத்து தன்னுடைய காரை கேட்க எடுத்துக்கப்பா இந்த விஷயத்தை இதுக்கு மேல பெருசாக்க வேண்டாம் என்று சொல்கிறனர். முத்து எனக்கு என் கார் கிடைச்சா போதும் என்று சொன்னதும் இன்ஸ்பெக்டர் அவனை கூட்டிட்டு வாங்க என்று சொல்ல போலீஸ் சிட்டியை கூட்டி வந்து நிற்க வைக்கின்றனர். இவன் தான் அந்த வீடியோவை எடுத்தது. இவன் கிட்ட இருந்து ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடா வாங்கி தரேன் என்று சொல்ல முத்து இவனே கொள்ளை அடிக்கிறவன், இவன் பணம் எனக்கு எதுக்கு? இவன மாதிரி தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கிடைக்கணும், இனிமே இந்த மாதிரி பண்ணக்கூடாதுனு பயம் வரணும் இவன புடிச்சு ஜெயில்ல போடுங்க என்று சொல்ல சிட்டி மீது எஃப் ஐ ஆர் போட சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.

அதன் பிறகு கார் சாவியை வாங்கிக் கொண்டு இவர்கள் கிளம்பும்போது இவன் மட்டும் வெளியே இருந்திருந்தால் உங்க கையால 4 அடி அடிக்க சொல்லி இருப்பேன் என்று சொல்ல அவ்வளவு தானே என்று முத்து சிட்டியை பிடித்து அறைய போலீஸ் முத்துவை தடுத்து திட்டி அனுப்பி வைக்கின்றனர்.

மறுபக்கம் அண்ணாமலை எல்லோரையும் கூப்பிட்டு டிவியில் வீடியோவை போட்டு முத்து தப்பே பண்ணல என்று நிரூபிக்கிறார். மீனா தனி ஆளாக தன்னுடைய புருஷனை வெளியே கொண்டு வந்து இருக்கா என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். நானே முத்து மேல சந்தேகப்பட்டுட்டேன் எனவும் வருத்தப்படுகிறார்.

மனோஜ் இது அவனுடைய செட்டப்பா கூட இருக்கும் என்று சொல்ல விஜயா அவன் பண்ணாலும் பண்ணுவான் என்று சொல்ல அண்ணாமலை உங்க ரெண்டு பேருக்கும் நல்ல புத்தியே கிடையாது என்று திட்டுகிறார். பிறகு விஜயாவை ஆரத்தி கரைத்து எடுத்து வர சொல்ல அவர் அதெல்லாம் என்னால பண்ண முடியாது என்று சொல்ல உன்னை பண்ணுவியா மாட்டியான்னு கேட்கல போய் எடுத்துட்டு வா என்று மிரட்டி அனுப்புகிறார்.

அதன் பிறகு முத்து மீனா ரவி ஆகியோர் வீட்டுக்கு வர அண்ணாமலை அவங்கள அங்கேயே நிக்க சொல்லு என்று நிற்க வைக்க ரவி முத்து தப்பே பண்ணலப்பா என்று சொல்ல விஜயா ஆரத்தி தட்டுடன் வருகிறார். ஸ்ருதி ரோகிணி என ரெண்டு பேரையும் கூப்பிட்டு விஜயா உடன் சேர்ந்து ஆரத்தி எடுக்க சொல்கின்றனர். மூவரும் சேர்ந்து முத்து மீனாவுக்கு ஆரத்தி எடுக்க முத்து உள்ளே வந்ததும் அண்ணாமலை அவரை கட்டிப்பிடித்து என்னை மன்னித்து விடுடா என்று சொல்ல முத்து என்னப்பா நீ என்கிட்ட எல்லாம் மன்னிப்பு கேக்குற என்று கண் கலங்குகிறார்.

நான் குடிக்கும் போது யாரும் சந்தேகப்படல நான் குடிக்காத போது யாரும் என்னை நம்பல என நீ சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப வலிக்குது என்று வருத்தப்பட விடுப்பா என்ன நீ எவ்வளவு வேணாலும் அடி ஆனால் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத என்று சொல்கிறார். பிறகு மீனாவை பாராட்டி எப்பவும் இதே மாதிரி ஒருத்தர் ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையா வாழனும் என்று சொல்கிறார்.

அடுத்து மீனா விஜயாவிடம் சென்று என் புருஷன் குடிக்கவே இல்ல இப்ப என்னை யாரும் குடிகாரன் பொண்டாட்டின்னு சொல்ல மாட்டாங்க என்று நோஸ்கட் கொடுக்கிறார். அடுத்து ரோகிணி இடம் வந்து என் புருஷனை எனக்கு திருத்த தெரியல தான், ஆனா அவர் குடிக்கவே இல்ல என்று பதிலடி கொடுக்கிறார். எதுவாக இருந்தாலும் இனிமே யோசிச்சு பேசுங்க என்று சொன்னதும் விஜயா ஏய் என்னடி அவகிட்ட பேசிட்டு இருக்க, உன் புருஷன் அன்னைக்கு ஒரு நாள் குடிக்கல அதுக்காக அவன் குடிகாரன் இல்லைன்னு ஆயிடுமா என்று மீனாவிடம் சத்தம் போட்டு ரோகிணியை ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

அண்ணாமலை ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வா சாமி கும்பிடுங்க என்று அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சத்யா சிட்டியை பார்க்க சிட்டி உனக்கு அட்வைஸ் பண்ற உன் மாமாவே குடிச்சுட்டு சுத்திட்டு இருக்காருன்னு உன்கிட்ட காட்ட தான் வீடியோ எடுத்தேன் அதை என் பக்கத்தில் இருந்த பன்னாட எனக்கு தெரியாம குடி போதையில யாருக்கோ அனுப்பிட்டு இருக்கான். உனக்கு என் மேல கோவம் எதுவும் இல்லையே என்று பேசி சத்யாவை நம்ப வைக்கிறார்‌. நான் வெளியே வர வரைக்கும் என் இடத்தில் இருந்து எல்லாத்தையும் நீ தான் பார்த்துக்கணும் என்று சொல்லி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

sirakadikka aasai serial episode update 10-05-24
sirakadikka aasai serial episode update 10-05-24