தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரும் ஆட்டோவில் வந்து இறங்க ஹவுஸ் ஓனர் கார் இங்கே என்று கேட்க முத்து உண்மையை சொல்ல வரும்போது மீனா மெக்கானிக் செட்ல இருக்கு என பொய் சொல்லி விடுகிறார்.
அதன் பிறகு மீனாவின் அம்மா ஆரத்தி எடுக்க வெளியே கூப்பிட நான் என்ன பெருசா சாதனை பண்ணிட்டு உங்க பொண்ணு தான் பெரிய பெரிய சாதனை எல்லாம் பண்ணி இருக்கா அவளுக்கு எடுங்க என ஷாக் கொடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து காரை கந்து வட்டிக்காரன் புடுங்கி போன விஷயத்தை சொல்லி கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையில் எல்லாமே போச்சு என பேச மீனா முத்துவை தனியாக வெளியே அழைத்துச் சென்று என்னை திட்டறதா இருந்தா வீட்டுக்கு போய் திட்டுங்க இங்கே எதுவும் செய்யாதீங்க அப்புறம் இது நல்ல நாளாவே இருக்காது அவங்க சந்தோஷமா இருக்கிறதும் இல்லாததும் உங்க கையில இருக்கு என மீனா கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து பத்து கார் விஷயமாக கண்டு கட்டி காரணம் பாத்துட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார். அங்கு வந்து கார் எதுக்கு புடிங்கிட்டு வந்தீங்க என்று கேட்க எனக்கு கார் கொடுக்க முடியாது என சொல்கின்றனர். ஏன் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு என கண்டுபிடிக்காரர் சொல்ல முத்து என் தலை முடி கூட உன் கால்ல விழாது என பதிலடி கொடுக்கிறார். அன்னைக்கு என் அப்பாவை பத்தி தப்பா சொன்னது நீ தான் நீ தான் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி வாடகையை எடுத்துக் கொடுத்து காரை கேட்க காரை கொடுக்க முடியாது என மறுத்து விடுகிறார்.
நீ இல்லன்னா என்ன வேற யார்கிட்டயாவது கார வாடகைக்கு எடுத்து ஓட்ட போறேன் என சொல்லி அங்கிருந்து கோவமாக கிளம்பி வருகிறார் முத்து. பிறகு முத்து குடி பாதையில் வீட்டுக்கு வந்து ஹவுஸ் ஓனரிடம் உண்மைய சொல்லணும் நீ பொய் சொல்லிட்ட என்று சொல்ல மீனா தடுத்து நிறுத்தி சமாளித்து விடுகிறார்.
மறுபக்கம் ரோகினி அம்மா போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்ல நீ எதுக்கு போன் பண்ண என கோபப்படுகிறார். கிரிஷ் கிட்ட பேசணும்னு சொன்னால் என்ன சொன்னது ரோகிணி அவனிடம் அடுத்த மாசம் ஊருக்கு வரேன் என்று சொல்கிறார். அடுத்து ரோகினி அண்ணா உனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பி இருக்கு இது உங்களுக்கு தல தீபாவளி இல்லையா அதனால டிரஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். முடிந்த அளவுக்கு உண்மை சீக்கிரம் சொல்லிடு என்று சொல்ல ரோகினி கோபப்பட்டு போனை வைத்து விடுகிறார்.
இங்க முத்துவை சாப்பிட கூப்பிட்டு வந்து உட்கார வைத்து நிலையில் அவர் ரவியின் கல்யாணம், அப்பாவின் உடல்நிலை எல்லாவற்றையும் சொல்லி கவலைப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
