தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் காலையிலிருந்து எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருக்க அண்ணாமலை முத்து பற்றி விசாரிக்க அவர் இன்னும் வரல என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு ரோகிணி எழுந்து வர விஜயா காபி எடுத்து வந்து கொடு என்று மீனாவை அனுப்ப அப்போது மனோஜ் கேஸ் விசயமாக போலீசார் வீட்டிற்கு வருகின்றனர். மீனாவை பார்த்த போலீஸ் நீ எங்க அம்மா இங்கே என்று கேட்க அண்ணாமலை என்னுடைய மருமக தான் என்று சொல்ல சத்தியா முத்துவின் பைக் திருடிய விஷயத்தை போலீசார் போட்டு உடைக்கின்றனர்.
உடனே விஜயா மீனாவையும் மீனாவின் குடும்பத்தையும் அவமானப்படுத்தி பேச மனோஜ் நான் கிரேட் எஸ்கேப் இல்லனா இந்த திருட்டு கும்பல் கிட்ட போய் மாட்டிகிட்டு இருப்பேன் என்று சொல்ல ரோகினி நக்கலாக பார்த்து சிரித்து சந்தோஷப்படுகிறார்.
பிறகு அண்ணாமலையும் மீனாவிடம் நீ ஏமா என்கிட்ட முன்னாடியே சொல்லல என்னால இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டு செல்ல மீனா கண்கலங்கி அழுகிறார். வீட்டுக்கு வந்துட்டு போனதிலிருந்து மீனா போன் பண்ணவில்லை என அவரது அம்மா போன் செய்ய மீனாவின் குரலை கேட்டு என்னாச்சு என்று விசாரிக்க சத்தியா பைக் திருடிய விஷயம் உங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு என்று சொல்லி கலங்கி அழ இங்கே மீனாவின் அம்மாவும் கண்கலங்கி அழுகிறார்.
சத்யா வீட்டுக்கு வர என்னாச்சு என்று கேட்க எல்லாம் உன்னால தான் என்று நடந்த விஷயத்தை சொல்லி திட்ட சத்தியாவும் கண்கலங்கி அழுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.