தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் பத்திரிக்கை கொடுக்க வெளியே கிளம்ப அப்போது முத்து காரில் வந்து இறங்கி வாங்க நான் கொண்டு போய்விட்டு வருகிறேன் என சொல்ல விஜயா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று ஏளனமாக பேச எல்லாத்துக்கும் பதிலடி கொடுக்கிறார் முத்து.
இதனைத் தொடர்ந்து எல்லாம் மீனா வந்த நேரம் என மீனாவை அவமானப்படுத்தி பேச இதைக் கேட்டு மீனா கண்கலங்கி நிற்கிறார். மறுபக்கம் ரோகிணி மனோஜ்க்கு சில இடங்களில் வேலை பார்த்து வைத்திருப்பதாக சொல்ல மனோஜ் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணமும் சொல்லி வேலை வேண்டாம் என்று சொல்கிறார். அதோட கல்யாணம் முடிந்த பிறகு வேலைக்கு போகிறேன் கல்யாணம் முடிந்தது லீவு போட முடியாது என சொல்கிறார். பிறகு ரோகிணி மனோஜ் செலவுக்காக பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக வீட்டில் மீனா சமைக்க அரிசி எடுக்க போக அரிசி கம்மியாக இருப்பதால் பாத்திரத்தை சுரண்டி அரிசி எடுக்க அங்கு வரும் விஜயா எல்லாத்தையும் அழிச்சது போதாது என்று இப்போ மொத்தமா சுரண்டி எடுக்க வந்துட்டியா என்று அவமானப்படுத்துகிறார். இதனால் மீனா கண் கலங்கி நிற்க அண்ணாமலை அரிசி வாங்கல அதனால வீட்ல இல்ல இதுல மீனா மேல தப்பு சொல்ல என்ன இருக்கு என்று விஜயாவை கண்டிக்கிறார். திரும்பவும் விஜயா மீனாவிடம் வந்து இனி அரிசி பாத்திரத்தில் கைய வைக்க கூடாது நான் தான் அரிசி எடுத்து தருவேன் ஆர்டர் போடுகிறார்.
அதன் பிறகு அரிசி வாங்கி பாத்திரத்தில் கொட்டி வைத்திருக்க மீனா சமைக்க போக அரிசி எடுக்காமல் விஜயாவிடம் கேட்க வர அவர் தூங்கிக் கொண்டிருந்ததால் சமைக்க லேட் ஆகும் என அரிசி எடுக்க போக அந்த சமயம் பார்த்த அங்கு வரும் விஜயா சத்தம் போட்டு மீனாவை திரும்பவும் அவமானப்படுத்தி கலங்க வைக்கிறார். ரெண்டு நாள்ல கஷ்டப்பட்டு வேலை செஞ்சு 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி வந்து அதுல ஒரு ரூபா கூட செலவு பண்ண முடியாம உங்க கிட்ட மொத்தமாக தூக்கிக் கொடுத்துட்டேன் என கோபத்தை காட்டுகிறார். இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டுக்கு வரும் முத்து மீனாவின் கண்கள் கலங்கி ரெட் கலராக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு யாராவது ஏதாவது சொன்னாங்களா என கேட்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.