தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மனோஜ் வேலை கிடைக்காதது பற்றி விரக்தியாக பேச பிறகு விஜயா நான் பார்வதி வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் என்று சொல்லி கிளம்பிச் செல்ல மனோஜ் பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கும் போது அண்ணாமலை விஜயாவிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
உடனடியாக விஜயா ரூமுக்கு சென்ற மனோஜ் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விடுகிறார். மறுபக்கம் மீனா மற்றும் ரவி இருவரும் ஸ்ருதியை பார்க்க வர ரவி ஸ்ருதியிடம் பெரிதாக பேசாமல் இருக்க மீனாவை டப்பிங் பேச அனுப்பி வைத்துவிட்டு ஸ்ருதி ரவியை கூப்பிட்டு உனக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா நான் என்ன லவ் பண்ணுனு உன்னை கம்பெல் பண்ணல, நீ பதில சொல்லிட்டு போயிட்டே இரு என்று சொல்லி கோபப்பட ரவி பிடிக்கும் என்று சொல்லி தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
அதன் பிறகு இங்கே வீட்டுக்கு வந்த ரோகினி தலை வலிக்குது என்று சொல்ல மனோஜ் தலையை பிடித்து விட்டுக் கொண்டு அந்தமான் போவதற்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு என்று சொல்லி டிக்கெட் எடுத்த பணம் போக மீதியை கொண்டு வந்து தன்னுடைய சம்பளம் என ரோகினியிடம் கொடுக்க அவர் சந்தோஷப்பட்டு மனோஜ்க்கு முத்தம் கொடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து விஜயா வட்டி கட்ட பணத்தை தேட அங்கு பணம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மனோஜிடம் பணம் பற்றி கேட்க அவர் அதுவாயென விஷயத்தை சொல்ல வர ரோகினி வந்து விடுவதால் எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லி உண்மையை மறைத்து விடுகிறார்.
பிறகு வீட்டில் உள்ள எல்லோரிடமும் அது பத்தி கேட்க எங்களுக்கு தெரியாது என்று சொல்ல முத்து பணம் காணாமல் போச்சுன்னா மனோஜ் கிட்ட தான் கேட்கணும் என்று சொல்ல மனோஜ் திருத்திருவென முழிக்கிறார். கடைசியில் விஜயா யார் எடுத்ததுனு எனக்கு தெரிஞ்சு போச்சு இவளோட தம்பி தான் திருடி இருக்கணும். அந்த திருட்டு பையன் பதுங்கி பதுங்கி விட்டுக் கொள்ள வரும்போது எனக்கு சந்தேகம் இருந்துச்சு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க மீனா என் தம்பி மேல பழி போடாதீங்க அவன் படிக்கிற பையன் எது சொன்ன விஜயா அந்த படிக்கிற பையன் தானே என்று ஷாக் கொடுக்கிறார்.
மனோஜ் அவன்தான் எடுத்திருக்க வேண்டும், பணம் எப்படி கை கால் முளைத்து வெளியே போயிருக்குமா என்று பழியை தூக்கி போட்டு எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார்.