தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கையும் களவுமாக சிக்க சீதா, மீனாவின் அம்மா என எல்லோரும் விஜய்க்கு பதிலடி கொடுக்க முத்து மனோஜ் வச்சு செய்ய ரோகினி பதில் பேச முடியாமல் தலை குனிகிறார்.
உடனே விஜயா ஐயோ நான் தான் எல்லாத்தையும் மறந்துட்டேன் இந்த ஒத்த தலைவலியால எல்லாமே மறந்து போகிறேன் என தலையில் அடித்துக் கொண்டு மனோஜிடம் நான் தான் பணத்தை கொடுத்தேன் அதை மறந்தே போயிட்டேன். டேய் நான் தான் கொடுத்தேன் நீயாவது சொல்லக்கூடாதா? தேவையில்லாம அந்தப் பையன் மேல சந்தேகப்பட்டுட்டேன் என்று டிராமாவை போட முத்து நல்லவேளை சாவித்திரி சிவாஜி கணேசன் எல்லாம் செத்துப் போயிட்டாங்க இருந்திருந்தால் இதெல்லாம் எப்படி பார்த்து இருப்பாங்க என்று விஜயாவை நக்கல் அடிக்கிறார்.
அண்ணாமலை அப்ப நீ தான் இவன்கிட்ட பணத்தை கொடுத்தியா என கேட்க விஜயா ஆமாம் என்று சொல்ல தேவையில்லாம அப்பாவி பையனை கூப்பிட்டு வச்சு இப்படி அவமானப்படுத்தி பேசிட்ட என்று திட்ட தப்புதான் எல்லாம் என்னுடைய தப்பு தான் மறந்துட்டேங்க என்று சொல்ல தப்புன்னு ஒத்துக்கிட்டா சரியாகிவிடுமா அவங்க கிட்ட மன்னிப்பு கேளு என அதிர்ச்சி கொடுக்கிறார்.
வேறு வழியில்லாமல் விஜயா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க அதன் பிறகு எல்லோரும் கிளம்பிச் சென்றதும் மனோஜை ரூமுக்குள் அழைத்து பளார் பளார் என அழைக்கிறார் விஜயா. சொந்த வீட்டிலேயே இப்படி திருடுற, அதுவும் என் பணத்தை.. என்கிட்ட கேட்டு இருந்தா நானே கொடுத்திருப்பேன் என கோபப்படுகிறார்.
முதல்ல நீ ஒரு வேலையை தேடிக்க அப்பதான் இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வராது என சொல்கிறார் உன்னால அந்த ஒன்றும் இல்லாத குடும்பத்துக்கு முன்னாடி அசிங்கப்பட்டு நின்னேன் என ஆவேசமடைகிறார்.
அதனைத் தொடர்ந்து மீனா ரூமுக்குள் அழுது கொண்டிருக்கிற முத்து சமாதானம் செய்ய மீனா இனிமே அவங்க எப்படி இந்த வீட்டுக்குள்ள வருவாங்க? என்று கண்ணீர் விட்டு அழ முத்து எனக்கு அவங்க தான் உறவு நம்ம தான் என்னுடைய மாமியார் சீதா தான் என்னுடைய கொழுந்தையா, சத்யா தான் என்னுடைய மச்சான் அவங்க தான் என்னுடைய உறவு என்ன சொல்ல நீனா சந்தோஷப்பட்டு முத்துவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க பிறகு முத்துவும் மீனாவை கட்டிக் கொள்கிறார். மறுநாள் காலையில் மீனா தலைக்கு குளித்து சந்தோஷமாக வெளியே வர அதை பார்த்த விஜயா இவ சீக்கிரம் புள்ள பெத்துருவா போலையே என புலம்பி தவிக்கிறார்.
அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் பைக்கில் ஒன்றாக வர அதை பார்வதி பார்த்து விடுகிறார். ரவி ஸ்ருதியை ஸ்டூடியோவில் டிராப் செய்துவிட்டு இருவரும் மாறி மாறி ஐ லவ் யூ சொல்லிக் கொண்டு கிளம்பி வருகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
