தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரவி சந்தித்து பேசி அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன் நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வீட்டுக்கு வா அவளும் உன்ன விட்டுக் கொடுக்காமல் பேசுற நல்ல பொண்ணா தான் இருக்கிறார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட ரவி சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் மீனா பைனான்சியரை சந்திப்பதற்காக ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்க இங்கே வீட்டில் அண்ணாமலை தூக்கத்திலிருந்து எழுந்து கிட்சனுக்கு சென்று வாசனையெல்லாம் நல்லா தான் வருது ஆனா இன்னும் பசி இல்லை யாராவது வராங்களா பார்க்கலாம் என்று சோபாவில் வந்து உட்கார்ந்து விடுகிறார்.
அதன் பிறகு மீனா போன் செய்து மாமா நான் வர லேட் ஆகும் நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க என்று சொல்கிறார். பைனான்சியர் மீனாவிடம் எதுவும் செய்ய முடியாது என கோபமாக பேசிவிட்டு கிளம்பி விடுகிறார்.
அடுத்ததாக அண்ணாமலை சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து உட்காருகிறார். முத்து வீட்டு காலிங் பெல் அடிக்க பிறகு இவர் கதவை திறந்து விட்டு வந்து சாப்பிட விட்டு சாப்பாடு போடும் போது சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
உடனே ஓடி வந்து அண்ணாமலை சாப்பிடும் சாப்பாட்டை தட்டி விட்டு சாம்பாரில் பல்லி விழுந்த விஷயத்தை சொல்லி நீ சாப்பிடல தானப்பா என்று கேட்டு பதறுகிறார். அதன் பிறகு விஜய் மற்றும் பார்வதி இருவரும் வீட்டுக்கு வர முத்து அப்பா விட்டு எங்க ஊர் சுத்த போனீங்க என கோபப்பட இப்ப என்ன ஆயிடுச்சு என விஜயா கேட்கிறார்.
சாம்பார்ல பல்லி விழுந்து கிடக்கு என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடையும் விஜயா அதை என்கிட்ட கேக்குற உன் பொண்டாட்டி கிட்ட கேளு என கூறுகிறார். பிறகு மீனா உன் வீட்டுக்கு வந்து விட முத்து மீனாவை பிடித்து திட்டி சாம்பாரில் பல்லி இருப்பதை காட்ட அவர் நான் பாத்திரம் எல்லாம் மூடி வச்சுட்டு தான் போயிருந்தேன் ஏதோ தப்பு நடந்து இருக்கு என கூறுகிறார்.
விஜயா எங்க எல்லாரையும் ஒரேடியா கொன்னுடலாம்னு பாக்குறியா என மீனவிடம் கோபப்படுகிறார். மனோஜ்க்கும் இந்த சாப்பாடு தான் கொடுத்து அனுப்பினேன் அவனுக்கு ஏதாவது ஆயிட போகுது என பதறி போனை எடுத்துக் கொண்டு ரூமுக்குள் ஓட அங்கு வந்து பார்வதி அவனுக்கு ஒன்னும் ஆகாது காலைல நாமளும் இதே சாம்பார் தான் சாப்பிட்டோம் அப்ப இதுவும் ஆகல பாத்திரத்தை திறந்து விட்டது நீதான் அதுக்கப்புறம் தான் பல்லி விழுந்திருக்கும் என சொல்ல விஜயா ஆமா நானும் தான் தப்பு பண்ணி இருக்கேன் என கூறுகிறார்.
அதனாலதான் நான் வெளியில வாய் திறந்து எதுவும் சொல்லல மீனாவை அந்த திட்டு திட்டுற இது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா கத்தி உன் பக்கம் திரும்பி இருக்கும் நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.
வீட்டுக்கு வந்த ரவி ஸ்ருதியிடம் விஜயா வந்து பார்த்து பேசிய விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.