தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியுடன் உட்கார்ந்து வேலைக்கு போறது நீ மட்டும் தான் என சொல்ல ஏண்டி மனோஜ் வேலைக்கு போயிட்டு தானே இருக்காரு என்று கூறுகிறார். வேலைக்கு போறது தான் ஆனா நிறைய சம்பாதிக்கிறது நீதான் என பிளேட்டை மாற்றி விடுகிறார்கள் விஜயா.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஒரு போன் வர அவர் எல்லோரையும் கீழே கூட்டிக்கொண்டு செல்ல முத்து என்னப்பா விஷயம் உடம்பு எதுவும் சரி இல்லையா என்று கேட்க செல்வம் வீட்டுக்குள் வருகிறார். அப்பாவே உனக்கு போன் பண்ணி கார் எடுத்துட்டு வர சொல்லிட்டாரா என்று கேட்காமல் எடுத்துவிட்டு வந்து இருக்கேன் ஆனா அது உன்னுடைய கார் என்று கூறுகிறார். முத்து புரியாமல் இருக்க செல்வம் கதவைத் திறக்க தன்னுடைய காரை பார்த்த முத்து ஷாக்காகிறார்.
பிறகு அண்ணாமலை நாலரை லட்சம் பணம் கொடுத்து காரை வாங்கிய விஷயம் தெரிய வர முத்து அப்பாவுக்கு நன்றி சொல்ல அது எதுக்கு எனக்கு சொல்ற மீனாவுக்கு சொல்லணும் என்று கூறுகிறார். இதையெல்லாம் பார்த்த ரோகினி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
அதைத்தொடர்ந்து மீனா ரூமுக்குள் இருக்கும் போது உள்ளே வந்த முத்து அவருக்கு நன்றி சொல்ல வார்த்தை எப்படி என தெரியாமல் அலைந்து கொண்டு என் பர்சை காணும் என துணி எல்லாம் கலைத்து போட்டு மீனாவை சண்டை போட வைக்கிறார். பிறகு கைய குடு என்று சொல்லி நன்றி சொல்கிறார். எதுக்கு இந்த நன்றி எனக்கேட்டு மீனா முத்துவை கலாய்க்க கார் திரும்ப கிடைத்ததற்கு என்று சொல்லி வெளியே போலாம் வா என கூறுகிறார்.
இன்னைக்கு சந்தோசமா பேசி கூட்டிட்டு போவீங்க நாளைக்கு திட்டுவீங்க எனக்கு இதெல்லாம் தேவையா என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல நான் இப்ப என்ன உங்கிட்ட கெஞ்சனுமா புருஷன் சொன்னா வரமாட்டியா என சத்தம் போடுகிறார். மீனா அப்படின்னா ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னாடி நான் சொல்ற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போனோம் என்று கூறுகிறார்.
முத்துவும் சரி என்று சொல்லி மீனாவை கூட்டிக்கொண்டு காரில் செல்ல மீனா நான் சொல்லும் வரை கார் ஓட்டிட்டு இருங்க என சொல்லி முத்து உடன் லாங் டிரைவ் செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.