தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயாவும் ரோகினியும் பைனான்சியரை பார்க்க கிளம்ப மனோஜ் நானும் வரேன் என்று சொல்ல ரோகிணி வேண்டாம் நீ ஆபிசுக்கு போ நாங்க போயிட்டு வரோம் என்று சொல்லி ஆபீஸ்க்கு அனுப்பி வைக்கிறார்.
பிறகு இவர்கள் வெளியே கிளம்ப ரோகிணி மீனா ரொம்ப டல்லா இருக்காங்க உடம்பு முடியல போல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாமா என்று சொல்ல விஜயா அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், அவ சும்மா நடிச்சுக்கிட்டு இருக்கா என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து மீனா உடம்பு முடியாமல் உட்கார்ந்து கொண்டு விஜயா சொன்ன விஷயங்களை யோசித்து பார்த்து வருத்தப்படுகிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வரும் விஜயா பசிக்குது சாப்பிடலாம் என்று சொல்லி கிச்சனுக்கு போய் பார்க்க எதுவும் செய்யாமல் மீனா உடம்பு முடியாமல் படுத்திருக்க அங்கு வரும் விஜயா எழுந்து போய் சமையல் செய் என்று திட்ட ரோகினி நான் வேணா செய்யவா என்று கேட்க நீ எதுக்குமா செய்யணும்? அவ செய்யட்டும் உனக்கென்ன இதெல்லாம் செய்யனும்னு தலையெழுத்தா? உங்க அப்பா பெரிய பணக்காரர் சிங்கப்பூர்ல இருக்காரு அவ பூ கட்டுறவ என்று மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார்.
பிறகு மீனா முடியாமல் சமைத்துவிட்டு சாதம் வடிக்க அரிசியை எடுத்துக் கொடுக்க சொல்லி விஜயாவை கூப்பிட எப்படி பேசறா பாரு என திட்டி விட்டு வந்து அரிசி எடுத்துக் கொடுக்க மீனா சமைத்துவிட்டு சென்று படுத்துக் கொள்ள மீண்டும் அங்கு வரும் விஜயா சமைத்து முடித்து விட்டா சொல்ல மாட்டியா நீ சமைச்சுட்டனு எங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும் என்று திட்டுகிறார்.
பிறகு ரோகிணி மனோஜ் மற்றும் விஜயா மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ரோகிணி மீனாவையும் கூப்பிடலாம் என்று சொல்ல அவ அப்புறமா சாப்பிடுவா, நாம போய் சாப்பிடலாம் என்று சாப்பிடுகிறார்கள். அப்போது வீட்டுக்கு வரும் முத்து மீனா உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து யாரும் உன்னை சாப்பிட கூட கூப்பிடவில்லையா? தண்ணீர் கூட கொடுத்து கவனிச்சிக்கலையா என்று வெளியே வந்து கோபப்பட்டு சத்தம் போடுகிறார்.
நீயும் ஒரு பொண்ணு தானே உங்களுக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றா அவளுக்காக ஒரு வாய் சாப்பாடு கூட உங்களால கொடுக்க முடியலையா என்று ரோகிணியை பார்த்தும் திட்டுகிறார். அதன் பிறகு முத்து மீனாவுக்காக கசாயம் வைத்து கொடுக்க காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்த மீனா அதை குடித்ததும் வாந்தி எடுத்து விட முத்து மீனாவுக்கு சாப்பாடு கொண்டு வந்து ஊட்டி விடுகிறார்.
சரி நீ மாத்திரை போட்டுக்க நான் அப்பாகிட்ட போய் மாத்திரை ஏதாவது கேட்டு வாங்கிட்டு வரேன் என்று முத்து வெளிய வர மீனா முத்துவின் கையைப் பிடித்து எழுந்து அவரை கட்டிக் கொள்கிறார். மீனா முத்துவை கட்டிக்கொண்டு கண் கலங்க முத்துவும் மீனாவை கட்டிக் கொள்ள கைகளை எடுத்து வந்து பிறகு தயக்கத்துடன் கைகளை கீழே போட்டு விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.