தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் முத்து மற்றும் மீனா இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வருவது முத்து கையெல்லாம் வலிக்குது என புலம்பிக் கொண்டே வருகிறார்.
பிறகு இருவரும் சாப்பிட ஹோட்டலுக்கு செல்லலாம் என்று முடிவெடுக்க மீனா அங்கேயும் வந்து யார் கிட்டயாவது வம்பு இழுத்து விட்டு இருக்க கூடாது வாய மூடிட்டு சாப்பிடணும் என்று சொல்ல முத்து சாப்பிடறதுக்கு தானே வாய் இருக்கு எனக்கு கவுண்ட்டர் பட பேசாம சாப்பிடணும் என நீ விளக்கம் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து இருவரும் ஹோட்டலுக்கு வர ஏற்கனவே அந்த ஓட்டலில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வந்து சாப்பிட்டு கொண்டு இருக்க முத்து இவர்களை பார்த்து இந்த ஹோட்டல் வேண்டாம் எனக்கு பிடிக்கல இந்த கிளம்ப மீனா அவரை தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு ரவி முத்துவை பார்த்துவிட்டு சந்தோசமாக டேய் முத்து எப்படிடா இருக்க என ஓடி வர முத்து ரவி பிடித்து திட்டி சண்டை போட சுருதி மற்றும் முத்துவிற்கு இடையே முட்டிக் கொள்கிறது.
நீ வீட்டு பக்கம் வந்த காலை உடைச்சிடுவேன் என முத்து ரவிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு செல்ல ஸ்ருதி இவர் இருக்க வீட்ல எல்லாம் என்னால இருக்க முடியாது என ஷாக் கொடுக்கிறார். வீட்டுக்கு பார்வதி வர அவரை வைத்து கொண்டு விஜயா ரவியை வீட்டுக்கு கூப்பிடுவது குறித்து அண்ணாமலையிடம் பேச அவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
இந்த நேரம் பார்த்து முத்துவின் மீனாவும் வீட்டுக்கு வந்து விட முத்து அவன பார்த்து விட்டு தான் வந்திருக்கேன் அவ இந்த பக்கம் வரக்கூடாது என்று சொல்ல மீனா மாமா நான் ஒன்னு சொல்லலாமா என்று கேட்க விஜயா நீ என்னத்த பேச போற நீ ஒன்னும் பேச தேவையில்லை என தடுத்து நிறுத்த அண்ணாமலை சொல்லுமா என பேச சொல்கிறார்.
ரவி, ஸ்ருதி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தான் அவங்க பண்ணது தப்பு தான் இருந்தாலும் அவங்களுக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்காங்க. அவங்கள மன்னிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க அதனால உங்களுக்கு நல்ல பெயர் தான் வரும் என எடுத்து சொல்ல முத்து ஷாக் ஆகிறார். இதைக்கேட்டு விஜய் மீனா சொல்றது சரிதான் என தாளம் தட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.