தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி வீட்டுக்கு வர அண்ணாமலை இடம் விஜயா குறித்து விசாரிக்க அவர் உங்க அம்மா பத்தி உனக்கு தான் தெரியும் இங்க ரெண்டு பேரும் சேர்ந்துதானே எல்லாத்தையும் பண்ணுவிங்க என்று பதிலடி கொடுக்க ரோகிணி ஆன்ட்டி ரூம்ல தான் இருப்பாங்க போய் கூப்பிடு என்று சொல்கிறார்.
அதன் பிறகு முத்து மீனாவையும் கூப்பிட்டு ரவி ஸ்ருதியையும் கேட்க அவர்கள் இன்னும் வரவில்லை என தெரிந்ததும் சரி பரவால்ல என்று சொல்லி பணத்தை எடுத்துக் கொடுக்க மனோஜ் இதற்கு தானே எல்லாரும் என்னை அடிச்சிங்க இதுல ரெண்டு லட்சம் இருக்கு முத்து கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல என்னுடைய நகையா எடுத்துட்டு போன? யாருடைய நகையை எடுத்தயோ அவங்ககிட்ட கொடு என்று அண்ணாமலை பதிலடி கொடுக்கிறார்.
பிறகு முத்துவிடம் பணத்தை கொடுக்க அவன் வேண்டாம் என்று சொல்ல மனோஜ் வேணாமா என்று பணத்துடன் ரூமுக்கு எஸ்கேப்பாக அண்ணாமலை அப்படியே நழுவு பார்க்காத.. எதுக்கு பணம் வேண்டாம் என்று கேட்க முத்து 4 லட்சத்துல 2 லட்சம் தான் இருக்கு என்று சொல்ல மீதி பணத்தை கூடிய சீக்கிரம் கொடுத்து விடுவதாக ரோகினி சொல்கிறார். பிறகு மீனாவும் வாங்கிக் கொண்டு என்று சொல்ல முத்து பணத்தை வாங்கிக் கொள்கிறார்.
விஜயா ரோகினி நினைச்சா மொத்த பணத்தையும் கொடுத்திருக்க முடியும் என்று வாய் கிழிய பேச அண்ணாமலை செய்யறது எல்லாம் செஞ்சிட்டு இப்படி பேசுவதனால் தான் எனக்கு பேசக்கூட பிடிக்கல.. வாயை அடக்க சொல்லு உன் புருஷன் திரும்ப சொல்லு என்று ரோகிணியிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார்.
அதன் பிறகு முத்து வந்த பணத்தை வைத்து நகை வாங்கிவிடலாம் என்று சொல்ல இனி நான் கேட்ட வாழ்க்கையை கொடுத்தது தான் நீங்க சம்பாதிச்சு எடுத்துக் கொடுக்கிற நகையை தான் நான் போடுவேன். இந்த பணத்துல நாம் பேசிய மாதிரி இன்னொரு கார் வாங்கலாம் என்று சொல்ல முத்துவும் ஓகே சொல்கிறார்.
அடுத்து அண்ணாமலை ஹாலில் படுக்க முத்து ரூமுக்குள் போய் படுக்க சொல்வதோடு அம்மாகிட்ட பேசிப்பா என்று சொல்ல அண்ணாமலை இந்த விஷயத்துல தலையிடாதே என்று திரும்பவும் திட்டிவிட விஜயா பாய் படுக்கையோடு வெளியே வந்து எனக்கு ரூம்ல குளிருது நான் இங்கேயே படுத்துகிறேன் என்று சொல்ல அண்ணாமலை உள்ளே எழுந்து செல்கிறார். மீனா நீங்களும் உள்ளவே படுங்க என்று சொல்ல நான் வெளியே வந்ததனால் தான் அவர் உள்ள போயிருக்காரு நீ நெனச்சா மாதிரியே நடக்குது போதுமா என்று கோபப்படுகிறார்.
அடுத்த நாள் சுருதி ரோகிணி காபி குடிக்க வர ரோகினி விஜயா பற்றி சொல்ல மீனா அவங்க கோபமா இருக்காங்க என்று சொன்னது உங்க மேல இதுக்கு கோபப்படனும் என்று ஸ்ருதி கேட்க ரோகினி ஓவரா பேசினாங்க இல்ல அதனால தான் என்று பதில் சொல்ல அவங்க மனோஜ் மேல தான் கோபப்படனும் என்று ஸ்ருதி பதிலடி கொடுக்க இருவருக்கும் வாக்குவாதம் உருவாக மீனா நமக்குள்ள சண்டை வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார்.
மூணு பேரும் சேர்ந்து அத்தை கிட்ட பேசலாம் என்று ஐடியா கொடுக்க பிறகு 3 பேரும் விஜயாவிடம் பேச வர விஜயா அவர்கிட்ட நான் எப்படி பேச முடியும் அவர்தான் என்கிட்ட பேச மாட்டேனு முகத்தை திருப்பிவிட்டு போறாரு.. இப்போ மகாராணி இவ தானே.. இவ நினைக்கிற மாதிரி தானே நடக்குது என்று மீனாவை திட்ட சுருதி தப்பு பண்ணது நீங்க மீனாவை எதுக்கு திட்டுறீங்க என்று கோபப்படுகிறார். நீங்க மீனா கிட்ட மன்னிப்பு கேட்டா எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று சொல்ல விஜயா எல்லாரும் இவ கால்ல போய் விழணுமா என்று கோபப்படுகிறார். அங்கிள் உங்ககிட்ட பேசணும்னா இது ஒன்னு தான் வழி யோசிச்சு பாருங்க என்று சொல்லி சுருதி வெளியே வந்து விடுகிறார்.
அடுத்ததாக முத்து செல்வத்துடன் இரண்டாவது கார் வாங்குவதற்காக ஷோரூம் வந்திருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.