தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவி வராமல் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்க முத்து உங்களுக்காக வேற யாரையாவது கூட்டிட்டு வந்தா சாப்பிட வைக்க முடியும் என நக்கல் அடிக்கிறார்.
ரோகினி ஆன்ட்டி பாவம் என விஜயாவுக்கு பரிந்து பேச என்னுடைய முடிவு எல்லாம் இப்போ தப்பா தான் இருக்கு, நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணலாம்னு சொல்லுங்க என்று சொன்னதும் அம்மாவை நம்பி தான் நம்ம பொழப்பு ஓடிட்டு இருக்கு என மனோஜ் நீங்களும் மாமாவும் என்ன முடிவெடுத்தாலும் சம்மதம் என சொல்கிறார்.
அதன் பிறகு சரி அவங்களுக்கு போன போட்டு வர சொல்லு என சொன்னது விஜயா உடனே போன் போடவா என்று கேட்க அதற்கு முன்னாடி ஒரு கண்டிஷன் இருக்கு. அந்த பொண்ணோட அப்பா அம்மா அவங்களா வந்து ஸ்ருதி உங்க வீட்டு மருமக இனிமே நீங்கதான் பார்த்துக்கணும் என சொல்லி விட்டுட்டு பாக்கணும் அப்படின்னா அவங்கள இந்த வீட்டுக்குள்ள அனுமதிக்க நான் சம்மதிப்பேன் என ஷாக் கொடுக்கிறார்.
விஜயா அது எப்படிங்க முடியும் என்று சொல்ல நான் ஒரு படி இறங்கி வந்துட்டேன் இதுக்கு மேலயும் என்னால இறங்கி வர முடியாது என அண்ணாமலை கேட்டு போடுகிறார்.
அதற்கு அடுத்ததாக முத்து ரூமுக்குள் உடம்பெல்லாம் வலிக்குது என சொல்ல மீனா தைலம் போட்டு தேச்சு விட்டு முதுகு மேல் ஏறி மிதிக்க முத்து அம்மா அம்மா என்று கத்த விஜயா என்ன முத்து பாசமா அம்மா என்று கத்திக்கிட்டு இருக்கான் என வந்து கதவை திறந்து பார்க்க மீனா மிதித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
என்னடி அவன போட்டு இந்த மிதி மிதிச்சிட்டு இருக்க என சத்தம் போட்டுவிட்டு அண்ணாமலையிடம் பஞ்சாயத்து வைக்க வலிக்காக மீனா மிதிச்சிருப்பா அதுல உனக்கு என்ன என்று அண்ணாமலை பாடம் எடுக்கிறார்.
இந்த முத்து எல்லாத்தையும் மறந்துட்டு திரும்பவும் அவகிட்ட இப்படி இருக்குமா இருக்கா என்ன மாயாஜாலம் பண்ணி மயக்குறாளோ என புலம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.