தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கையில் கத்தியுடன் வந்து நிற்க அதிர்ச்சியடையும் விஜயா இந்த ஆப்பிளையும் கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வந்து என பொறுமையாக சொல்லி அனுப்புகிறார்.
அதன் பிறகு ஸ்ருதி எனக்கு இட்லி வேண்டாம் ஒரே ஒரு ஆம்பளைக்கு மட்டும் போதும், மீனா உங்க கையால ஒரு ஸ்பெஷல் ஆம்லெட் என்று கேட்க ரோகிணிக்கும் சேர்த்து ரெண்டு முட்டையா போடு என்று விஜயா சொல்ல இது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்து ஆம்லெட் தான நான் போறேன் என்று சொல்லி பிரிட்ஜில் இருந்து முட்டையை எடுத்து கீழே போட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
இது என்ன ஓட்டலா ஆளாளுக்கு ஆர்டர் குடுத்துட்டு இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா நீங்க செஞ்சு சாப்பிடுங்க இல்லையா நீங்க செஞ்சு கொடுங்க என விஜயாவை வெளுத்து வாங்க ஸ்ருதி மற்றும் ரோகினி எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று கிளம்பிச் சென்று விடுகின்றனர்.
அதன் பின்னர் விஜயா மீனாவை அதையெல்லாம் துடைத்து க்ளீன் பண்ண சொல்கிறார். மார்க்கெட்டுக்கு போய் சொல்றதெல்லாம் வாங்கிட்டு வந்து எல்லாருக்கும் புடிச்ச மாதிரி சமையல் பண்ணி வை என லிஸ்ட் சொல்ல பிறகு மீனா மார்க்கெட் கிளம்பி வருகிறார்.
அங்கே அவருடைய அம்மா மீனாவை பார்த்து தன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் கழுத்தில் இருந்த செயின் எங்கே என்று கேட்க நடந்த விஷயங்களை சொல்கிறார். அதன் பிறகு மீனா அங்கிருந்து கிளம்பி வர விஜயா இதெல்லாம் வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா எங்க போய் சுத்திட்டு வர என்று மீனாவை கேள்வி கேட்டு திட்டி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னா சமைக்கணும் என்று லிஸ்ட் சொல்ல மீனாவும் சமைத்து முடிக்கிறார். சமைத்து முடித்து வெளியே வந்த மீனாவின் முகத்தில் அழுக்குத் துணிகளை தூக்கிப்போட்டு இதெல்லாம் துவை என விஜயா கொடுமைப்படுத்துகிறார்.
அடுத்ததாக ரவி சுருதியை ட்ராப் செய்ய வர அப்போது இருவரும் சேர்ந்து ஒரு கார் வாங்கிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். நாளைக்கு மனோஜ் வேலை செய்யும் ஷோ ரூமுக்கு போய் கார் புக் பண்ணிடலாம் என்று சொல்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.