தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இரண்டு வரும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையோடு முடிவடைய உள்ளது. இதனால் வரும் ஜனவரி 17ஆம் தேதி முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் 9 மணி முதல் 10 மணி வரை என ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அறிவிப்பு வெளியானால் நிச்சயம் அது சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு சம கொண்டாட்ட அறிவிப்பாக இருக்கும் என நம்பலாம்.

Sirakadikka Aasai Serial Time Extension update