தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினிக்கு போன் செய்து மலேசியாவில் இருந்து உன் தாய் மாமா வசீகரன் போன் பண்ணாரு, உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம், உன்ன பாக்கணும்னு ஆசைப்படுறாராம். அநேகமா நாம எல்லாரும் மலேசியா போக வேண்டி இருக்கும் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
இதையெல்லாம் கேட்ட ரோகிணி யாரோ புதுசா கேம் விளையாடுறாங்க என்று நினைத்துக் கொண்டு அந்த நம்பரை எனக்கு கொடுங்க என்று கேட்க என்னமா தாய் மாமா நம்பர் கூட நீ வச்சிருக்க மாட்டியா எனக்கும் பிரைவேட் நம்பர் தான் வந்தது அவரே உனக்கு போன் பண்றதா சொல்லி இருக்காரு நல்ல விதமாக பேசு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு இரண்டு பேர் வர விஜயா மலேசியாவில் இருந்து ரோகிணியின் சித்தப்பா வந்திருப்பதாக நினைத்து பேச அவர்கள் இன்னும் வட்டி கட்டல என சத்தம் போட விஜயா இன்னைக்கு வந்து கட்டிடுறேன் என்று சொல்லி சமாளிக்க அந்த நேரம் பார்த்து அண்ணாமலை வெளியே வந்துவிட அவருக்கு உண்மை தெரியாமல் சமாளிக்கிறார் விஜயா. பிறகு வட்டி கட்ட பணம் எடுத்துக் கொண்டு பார்வதி வர சொன்னா வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.
முத்து வட்டிக்காரருக்கு பணம் கட்ட கிளம்ப மீனா நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன், என்னை கூட்டிட்டு போங்க என்று சொல்ல முத்து மீனாவையும் கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் சத்தியா சிட்டியுடன் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது நடந்த விஷயங்களை சொல்ல உன் மேல வீண் பழி போட்டதுக்கு பதிலடி கொடுக்கணும் அதுக்கு என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று சொல்லி விஜயாவின் பணத்தை கொள்ளை அடிக்க ப்ளான் போட முதலில் சத்யா பயப்பட பிறகு சிட்டியின் பேச்சைக் கேட்டு மனம் மாறுகிறான். விஜயா பணத்துடன் நடந்து வர பைக்கில் வரும் இவர்கள் அந்த பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு செல்கின்றனர்.
அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு போன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணலாம் என சொல்ல வேண்டாம் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி விஜயா கந்துவட்டிக்காரர்களை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு நீங்க திரும்பவும் குத்தாதிங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். நீங்க இப்படி எல்லாம் பண்ணா பணம் தர மாட்டீங்க இந்த முறை உங்கள விட முடியாது என்று சொல்லி குடோனில் அடைக்க உத்தரவிட ஜோதி என்ற பெண் வந்து விஜயாவை இழுத்துச் சென்று குடோனில் அடைத்து விடுகிறார்.
விஜயா என்னை விட்டுடுங்க என கதறி துடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.