தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா ரோகினியிடம் உங்க அப்பாவ வர சொல்லுமா இல்லனா உங்க மாமாவையாவது வந்து பார்த்துட்டு போக சொல்லு அப்பதான் உனக்குன்னு ஒரு மரியாதை இருக்கும் பொங்கலுக்கு முன்னாடி வர சொல்லு என செக்மேட் வைக்கிறார்.
இதனால் ரோகிணி வித்யாவிடம் இருந்து என்ன செய்வது என தெரியாமல் புலம்ப வித்யா ரோகினியை கூட்டிக்கொண்டு ஒரு கறி கடைக்கு வருகிறார். அந்த கறிக்கடை ஓனர் டிராமாக்களில் நடிப்பவர் என்பதால் அவரை வைத்து ரோகிணி வீட்டில் நடிக்க ட்ராமா போட பிளான் போடுகின்றனர்.
அதாவது வித்யா அவரை கூப்பிட்டு கமல் மணிரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக உங்க டீடெயில அனுப்பி வச்சிருக்கேன் அதுக்கு முன்னாடி நீங்க ஒரு வேலை பண்ணனும் என்று சொல்லி ரோகினிக்கு தாய் மாமாவாக நடிக்க வேண்டும் என சொல்ல அவர் நான் பொய் சொல்லி நடிக்க மாட்டேன் பித்தலாட்டம் பண்ண மாட்டேன் என சொல்லி விடுகிறார். அப்படின்னா கமல்ஹாசன் பட வாய்ப்பு கிடைக்காது பரவா இல்லையா என்று சொல்ல அவர் பட வாய்ப்புக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
மேலும் வித்யா இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது உங்ககிட்டயும் சொல்லக்கூடாது என்று தான் சொல்லியிருந்தாங்க இதுவும் ஒருவித ஆடிசன் தான் உங்களுக்கே தெரியாம கேமரா வச்சு நீங்க நடிக்கிறது ரெக்கார்ட் பண்ணுவாங்க என்று சொல்ல அவர் ஓ அப்படியா அப்போ நடிப்புல எப்படி பிச்சு உதறுறேனு மட்டும் பாருங்க என நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
அதனை தொடர்ந்து வெறும் மாமா வந்தா மட்டும் போதாது ஏதாவது சீர் செய்யணும் அப்பதான் என் மாமியார் சும்மா இருப்பாங்க மனோஜ்க்கு ஒரு பிரேஸ்லெட், மோதிரமாவது போடணும் என்று சொல்லி பணத்துக்காக சிட்டியை பார்க்க வர அங்கிருந்த சத்தியா ரோகினி வருவதை பார்த்து மறைந்து கொள்ள ரோகினி ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். இதைப் பார்த்து சத்யாவுக்கு இவங்க அப்பா மலேசியாவில் இருக்காரு இவங்களும் பியூட்டி பார்லர் வச்சுட்டு இருக்காங்க அப்படி இருக்கும்போது அடிக்கடி எதுக்கு கடன் வாங்குறாங்க? ஏதோ தப்பா இருக்கே என நேசிக்கிறார்.
அடுத்து ரோகினி வித்யாவும் துணிமணி பிரேஸ்லெட் வாங்கி வந்து கறி கடைக்காரரிடம் கொடுத்து இதெல்லாம் நீங்க ரோகிணிக்கும் அவருடைய வீட்டுக்காருக்கும் கொடுக்கணும், சந்தேகம் வராமல் நடிக்கணும் என்று சொல்கின்றனர். கூடவே கொஞ்சம் பணத்தை கொடுத்து இதில் உங்களுக்கான துணிமணிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கின்றனர்.
இங்க வீட்டில் ரோகினி போன எடுக்காததால் மனோஜ் விஜயா எங்க போனான்னு தெரியலையே என்று பதற்றத்தில் இருக்க வீட்டுக்கு வரும் ரோகிணி அப்பாவால இப்போதைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு ஆனா தாய் மாமா வராரு டிக்கெட் கூட புக் பண்ணிட்டாரு செய்ய வேண்டிய சீரையும் அவர் செய்வார் என சொல்ல விஜயா சந்தோஷப்படுகிறார். மேலும் நேரா கிராமத்துக்கு வந்துடறேன்னு சொல்லி இருக்காரு எனவும் சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து எல்லோரும் கிராமத்துக்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.