விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சேனலில் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இதில் நேற்றைய எபிசோடில் முத்து நண்பனிடம் கல்யாணம் பற்றி பேசிய விஷயத்தை அதன் பிறகு விஜயா சொன்ன வார்த்தைகளாலும் நொந்து கொண்ட மீனா வருத்தமாக இருந்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் மீனா காணாமல் போக முத்து மீனாவின் வீட்டுக்கு போன் செய்ய சீதா அக்கா இங்கே உண்மையாவே வரல அம்மாகிட்ட ஏதோ கோபமா பேசி போன வச்சுட்டா என்று சொல்கிறார்.
மறுபக்கம் சிட்டி நீ போய் உன் மாமா மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு என்று சத்யாவை ஏற்றி விட சத்யா முத்து மீது கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இந்த நேரம் முத்துவை ஸ்டேஷனுக்கு வர எங்க அக்கா காணாம போனதற்கு இவர் தான் காரணம் என்று சத்தியா சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.
இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற எதிர்பார்ப்பை இந்த ப்ரோமோ வீடியோ உருவாக்கி உள்ளது.