Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாராட்டிய முத்து, மீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

SirgadikkaAasai Serial Episode Update 11-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பைனான்சியருக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்க அவர் உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே சென்ற மீனாவிடம் என்ன விஷயம் எதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கேட்க மீனா டெக்கரேஷன் செய்யும் விஷயத்தையும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்றும் சொல்லுகிறார் உடனே அவர் கஷ்டப்பட்டு முன்னேற பாக்குறீங்க இப்படிப்பட்ட உங்களுக்கு கண்டிப்பா உதவி பண்ணலாம் என்று சொல்லிவிட்டு சத்யாவிடம் பேசுகிறார். அவருக்கு நல்லா படிக்கணும் உழைக்கணும் அதுதான் வாழ்க்கையில முன்னேற்றம் என அட்வைஸ் கொடுக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் உள்ளே சென்று அவர் பணத்தை எடுக்கப் போக அங்கு சிந்தாமணி புகைப்படம் மாட்டிருக்கிறது. அவர் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து மீனாவிடம் கொடுக்க மீனா சந்தோஷப்படுகிறார் வட்டி எவ்வளவு எனக் கேட்க அதெல்லாம் வேணாம்மா நீங்க தான் ரெண்டு நாள்ல கொடுத்துறேன்னு சொல்றீங்க இல்ல கரெக்டா அது மட்டும் கொடுத்துருங்க போதும் என்று சொல்ல நான் அங்க பங்க்ஷன் முடிஞ்ச உடனே காசு எடுத்துக்கிட்டு வந்த நேரம் உங்ககிட்ட கொடுத்துட்டு தான் நான் வீட்டுக்கு போவேன் என்று சொல்லுகிறார். நன்றி சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்ப வெளியில் வந்தவுடன் நம்ம மார்க்கெட்ல போய் பூ ஆர்டர் குடுத்துட்டு வந்துடலாம் என்று சத்யாவை அழைத்துச் செல்கிறார்.

மறுபக்கம் மீனா டெக்கரேஷன் சூப்பராக முடித்துவிட அங்கு வேலை செய்த அவர் தோழிகளிடம் செல்பி எடுத்து சந்தோஷப்படுகிறார் இது மட்டும் இல்லாமல் போட்டோக்களையும் எடுக்க அங்கு இருப்பவர்கள் சூப்பரா வந்திருக்கு மீனா என்று சொல்ல நான் நினைச்சது விட சூப்பரா இருக்கு அக்கா என்று சொல்லுகிறார். இதனை கவனித்து சிந்தாமணியின் கூட இருக்கும் நபர் சிந்தாமணியிடம் சென்று இந்த டெக்கரேஷன் ஆர்டர் அந்த பொண்ணு சூப்பரா முடிச்சு இருக்கு என்று சொல்லி அது மட்டும் இல்லாம ரொம்ப சந்தோஷமா போட்டோவும் செல்பியும் எடுத்துட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் எடுக்கட்டும். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் எடுக்க முடியும் நாளைக்கு அழுதுகிட்டே இந்த தொழிலை விட்டு ஓட போற என்று சொல்லிவிட்டு சிந்தாமணி சென்று விடுகிறார்.

பிறகு மீனா முத்துவிற்கு போட்டோக்களை அனுப்பி எப்படி இருக்கு என்று கேட்கிறார் வீடியோ காலில் இருவரும் மாறி மாறி கொஞ்சிக் கொள்ள போட்டோக்கள் அருமையாக இருப்பதாகவும் அதுவும் இல்லாம வீடியோ கால்ல நீ ரொம்ப அழகா இருக்க மீனா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். உடனே நாளைக்கு அந்த பணத்தை வாங்கி பைனான்ஸ் கிட்ட கொடுத்துடு எந்த ஒரு தொழிலும் நேர்மை இருந்தால் தான் நம்ம வேகமா முன்னேற முடியும் என்று சொல்ல கண்டிப்பாக நான் கொடுத்து விடுவேன் என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் அவரு இதுக்கு அப்புறம் எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோங்கன்னு சொல்லி இருக்காரு என்று முத்துவிடம் சொல்லுகிறார். பிறகு இருவரும் கொஞ்சி பேசிக்கொள்கின்றனர்.

மறுநாள் மீனா மண்டபத்திற்கு பணத்தை வாங்க வர அந்த மேனேஜர் டெக்கரேஷன் சூப்பரா இருந்துச்சு அம்மா என்று சொல்ல ரொம்ப நன்றி சார் என்று சொல்லுகிறார் நன்றி சொல்லத்தான் வந்தியா என்று கேட்க அப்படியெல்லாம் இல்ல சார் நீங்க மீதி பணத்தை கொடுத்தீங்கன்னா வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுத்து விடுவேன் என்று சொல்ல மீதி பணம் எல்லாத்தையும் தான் கொடுத்துட்டோமே என்று சொல்ல நீங்க எப்ப சார் கொடுத்தீங்க அட்வான்ஸ் மட்டும் தானே கொடுத்தீங்க மீதி பணம் கொடுக்கல என்று சொல்ல ஒரு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார். அதில் மீனா அட்வான்ஸ் வாங்கும்போது போட்ட கையெழுத்து பத்திரம் என தெரிய வருகிறது ஆனால் அதில் மொத்த தொகையும் வாங்கியது போல எழுதியிருப்பதால் மீனா அதை படிக்காமல் கையெழுத்து போட்டுள்ளார். இதனால் அந்த மேனேஜர் பணத்தை கொடுத்தாச்சு போமா என விரட்ட மீனா அவர்களிடம் வாக்குவாதம் செய்கிறார்.

பிறகு என்ன நடக்கிறது? மீனா என்ன செய்யப் போகிறார்? சிந்தாமணியின் திட்டம் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SirgadikkaAasai Serial Episode Update 11-03-25
SirgadikkaAasai Serial Episode Update 11-03-25