Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீதாராமம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

sita ramam movie Latest update

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி அவர்களின் மகன்தான் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஹே சினாமிக்கா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வர தயாராகி இருக்கும் படம் தான் “சீதா ராமம்”. இப்படத்தை இயக்குனர் ஹனுராகவாபுடி இயக்கியுள்ளார். இதில் துல்கர்க்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, சுமந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சொப்னா சினிமாஸ் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.