சென்னையில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி கொட்டி தீர்த்து கனமழை காரணமாக முழுவதும் தண்ணீர் முழ்கியது. இன்னமும் வேளச்சேரி பள்ளிக்கரணை போன்ற இடங்கள் கடும் பாதிப்பில் இருந்து மீண்டு வராமல் உள்ளது.
மீட்பு பணிகள் முழு நீச்சல் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் நடிகர்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் நிவாரண நிதியாக நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் முதலாளாக 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருந்த நிலையில் அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பத்து லட்சம் ரூபாய்க்கு செக் வழங்கியுள்ளார்.