தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான டீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் இந்த படத்தின் ரிலீஸ்க்கு முன்பாக வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
அதில் ஒன்றுதான் அரபிக் குத்து. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வழிகளில் இந்த பாடல் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இந்த பாடலை முழுமையாக நான் எழுதவில்லை என கூறியுள்ளார். அனிருத் அரபி வார்த்தைகளை சேர்த்து பாட்டு பாடி அதை எனக்கு அனுப்பியிருந்தார்.
அதில் சில வார்த்தைகளை மட்டும் நீக்கி நான் தமிழ் வார்த்தைகளை சேர்த்துக் கொடுத்தேன் அவ்வளவுதான் நான் செய்தது மற்றபடி இது முழுக்க முழுக்க அனிருத் பாட்டு என தெரிவித்துள்ளார்.