Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன். வைரலாகும் சூப்பர் தகவல்

sivakarthikeyan act in goundamani movie update

ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு பிள்ளை என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்த கவுண்டமணி நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானான கவுண்டமணி நீண்ட நாட்களுக்குப் பின்பு “பழனிசாமி வாத்தியார்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் கவுண்டமணியின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றின அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan act in goundamani movie update
sivakarthikeyan act in goundamani movie update