நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக அயலான், டாக்டர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. தற்போது கொரோனா சூழ்நிலையில் ஊரடங்கால் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
அவரும் வீட்டில் தற்போது இருந்து வருகிறார். கொரோனாவை தடுக்கும் விதமாக அவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
அவரும் வேலையின்மையால் வாடியிருக்கும் சினிமா ஊழியர்களுக்கு உதவினார். இந்நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் வெள்ளைப்புலியை கடந்த 2018 அக்டோபர் மாதம் முதல் தத்தெடுத்தார்.
இந்நிலையில் இன்னும் நான்கு மாதங்களுக்கு அப்புலியை தத்தெடுத்துள்ளாராம். அப்புலிக்கு ஒரு நாள் உணவு செலவு ரூ 1,196.