கோலிவுட் திரை உலகில் சின்னத்திரை மூலம் தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். பல ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி வரும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க, யோகி பாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை மாவீரன் படகுழுவினர் செட்டில் கேக் வெட்டி செலிப்ரேட் செய்துள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#Maaveeran : Team Celebrated 11 Years Of SK in The Sets😎🔥#Sivakarthikeyan | #Mysskin
Shooting On Progress..🤙🏾💥pic.twitter.com/oEfV8UQRBt— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 4, 2023