Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிங்க பாதைக்கு மாறும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan changing to the path of the lion

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தை அடுத்து, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குனர் அட்லீயின் துணை இயக்குனர் அஷோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘சிங்க பாதை’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவாஜி படத்தில் ரஜினி பேசும் சிங்க பாதை என்ற வசனத்தை அடுத்த படத்தின் தலைப்பாக சிவகார்த்திகேயன் வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.