Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan completes dubbing for Doctor

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், டாக்டர் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.